Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
தேவி - cover

தேவி

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

தேவிக்குத் தனியாகச் சிந்திக்க வேண்டியிருந்தது!‘என் தோழியைப் பார்க்கப் போகிறேன்’ என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போதுகூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு செந்தாமரை தேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்ன செய்வது? சுயமான சிந்தனைக்கு அந்த வீட்டில் இடமே கிடையாதே, சிந்திக்காமல் எப்படிச் செயல்பட முடியும்?செந்தாமரை தேவி, வெண் தாமரைச் செல்வி. ஆகா நிரம்பவும் பொருத்தம் பார்த்துதான் அப்பாவும், அம்மாவும் பெயர் சூட்டி விட்டார்கள். தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமானால் உறைவாங்க இருபது பைசா கூட தேவியிடம் கிடையாது! செல்வியோ அத்தையின் அதட்டலில் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். தேவியின் திடமும் துணிவும் அவளுக்கும் இருந்திருந்தால் அவளும் மேலே படித்திருப்பாள். ஆனால், அவள் வெறும் கோழை, முதுகெலும்பே கிடையாது.லேசான புருவச் சுளிப்புடன் தேவி மேலும் வேகமாக நடக்கலானாள்.வைகையின் வெண்மணல் பரப்பு விரிந்து அகன்று பரந்து கிடந்தது. “வா மகளே, உனக்கு என்ன வேதனை? என்னிடம் சொல்லி ஆறுதல் பெற்றுக் கொள்’ என்று ஓடையாகச் சென்ற ஆறும் மணலும் அழைப்பது போல் தேவிக்குத் தோன்றியது. சட்டென விழிகளில் நீர் மல்கியது. சுற்றுப்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தால் அப்படியே குப்புற விழுந்து அழுதிருப்பாள்.அழுதிருப்பாளா! அதுவும் சந்தேகம்தான். தேவியைப் பொறுத்தவரையில் அழுவது கோழைத்தனம். அதிலும் மற்றவர் பார்க்க அழுவது என்றால் சே! அவமானம்! ஆத்திரத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். நிமிர்ந்து நேராக நடந்தாள். தன் வழக்கமான இடத்தை அடைந்தாள்.
 
வைகை ஆற்றுப் பாலத்தின் ஒருபுறமாக பாலத்தைத் தாங்கும் கரையோரத் தூண் மீது சாய்ந்தபடி, அவள் அமர்ந்தாள். மெல்லிய நீண்ட விரல்கள் பட்டு மணலில் கோலமிட்டன. பூமணலின் பூக்கோலம், பாவையின் மனதிலோ எண்ணத்தின் கோலம்.எண்ணுவதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. சசி அக்கா சொல்லுவதை ஏற்பதா வேண்டாமா? இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்.செல்விக்கும் அவளுக்கும் இந்தப் பிறவியில் ஒரு விடிவு காலம் வேண்டும் என்றால், சசி அக்கா சொல்வதை ஏற்பதுதான் வழி. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாக வேண்டும். பிரிய முடியாதபடி யாருக்கும் யாரிடமும் பற்றும் பாசமும் உருகி ஓடுவது ஒன்றும் இல்லைதான். ஆனால் செல்வியும் தேவியும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட வேண்டியதிருக்கும். ஒரு கவலை கலக்கம் என்றால், காப்பதற்குப் பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.இப்போதும் கலக்கத்தை தீர்க்க யாருமே கிடையாது. என்றாலும் தனியே இருக்கும் பெண்கள் தானே என்று யாரும் வாலாட்ட முடியாது. அதுவும்தான் எப்படிச் சொல்வது? அத்தையின் அக்கா மகன் ஒரு தடியன் வந்திருக்கிறானே அவன் செல்வியைப் பார்த்து விசில் அடிப்பதும் கொச்சையாகப் பாடுவது... எல்லாம் அத்தை கொடுக்கும் இடம். செல்வியும் பயந்து ஓடுகிறாள். அந்த நாய் விரட்டுகிறது. திரும்பி நின்று ஒருதரம் முறைத்தால் கூடப் போதும். அதற்குக் கூடத் துணிவின்றி நடுங்கிக் கொண்டு கிடக்கிறாள் மக்கு!இந்தக் கஷ்டத்தில் இருந்து அவளை மீட்க எந்தப் பெரியவர்கள் இருக்கிறார்கள்? இந்தப் பெரியவர்களை நம்பி எட்டிப் பார்க்கும் விடிவு காலத்தை விட்டு விடுவதா?சிந்தனையில் மூழ்கிக் கிடந்த தேவிக்கு சுற்றுப்புறமே மறந்திருந்தது.‘சுளீர்’ என்று யாரையோ அறையும் ஓசையும் “அய்யோ சத்தியமாய் நான் திருடவில்லையே” என்று ஒரு சிறு பெண்ணின் கதறலும் வெகு அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள்.கதறிய குரல் அறிமுகமானது போலவும் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தாள். பாலத் தூணின் மறுபுறம்தான் அங்கே விரைந்து ஓடினாள்
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 136 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Veliyetrappata Kudhirai - cover

    Veliyetrappata Kudhirai

    Paavannan

    • 0
    • 0
    • 0
    உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை; தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்கள் மீதான அக்கறையும் இயற்கை மீதான கரிசனம்கூடிய ஆன்மிகமே அது. பிரதேச எல்லைகளையும் மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத் தகுந்ததாகவே அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை பாவண்ணனின் கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.
    
    Short Story written by Pavannan
    Mostra libro
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Mostra libro
  • பல்வகைப்பாடல்கள் - cover

    பல்வகைப்பாடல்கள்

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    ரமணி ஒலி நூலுக்காக பல்வகைப் பாடல்கள் என்ற தலைப்பில் அமைந்த 11 பாடல்களில் ரமணி இவ்வொலி நூலாக்கியிருக்கிறார். 
    பாரதி பல்வகைப்பாடல்களில் நீதி என்ற தலைப்பின் கீழ் புதிய ஆத்தி சூடி அமைந்திருக்கிறது. விழுமியங்களும் பண்புகளுமே இந்தப் பாடலின் தலையாய பேசு பொருட்களாகின்றன. ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பாப் பாடல் பாடாத தமிழ் நாவேது! முரசு என்ற பாடல் விழுமியங்களின் வெற்றியைப் பறை சாற்றுகிறது. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் என்ற வரிகள் இப்பாடலில்தான் அமைகின்றன. சமுகம் என்ற தலைப்பின் கீழ் புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி, பெண் விடுதலை ஆகிய பாடல்களின் தாக்கம் நூறாண்டுகள் கடந்தும் தமிழ் நாட்டில் போற்றப்படுகின்றது. தொழில், மறவன் பாட்டு ஆகிய இரண்டு பாடல்கள் உழைப்பின் மேன்மையை வலியுறுத்துகின்றன. தாகூரின் ஒரு பாடலின் மொழிபெயர்ப்பாக நாட்டுக் கல்வி என்ற பாடல் அமைகிறது. புதிய கோணங்கி இனிவரும் காலம் இனிய காலம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
    Mostra libro
  • Adhirum Udhiram - cover

    Adhirum Udhiram

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Crime against women is one of the most common news we read/hear about. This blood-curdling book talks about a new kind of crime against women. Listen to Adhirum Udhiram to know more.
    
    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்மை பலரால் போற்றப்பட்டுக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரால் அந்தப் பெண்மை
    கயமைப்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு என்ற பெயர்களில் பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதை நாளிதழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் செய்திகளாக
    கேட்டும் வருகிறோம். மாதர் சங்கங்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்துகின்றன.  அண்மைக்காலமாய் பெண்களின் மேல் இன்னொரு விபரீதம் அரக்கத்தனமாய் பாய்ந்து குதறி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அது எதுமாதிரியான விபரீதம் என்பதை நீங்கள் அறிய நேரும்போது உங்களின் உதிரம் அதிரப்போவது உறுதி.
    Mostra libro
  • Paramabhagavadhan - cover

    Paramabhagavadhan

    T Janakiraman

    • 0
    • 0
    • 0
    தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட. சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர், நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
    Mostra libro
  • Theppakkulam - cover

    Theppakkulam

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
    Mostra libro