¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
தெய்வங்களின் திருவிளையாடல்கள் - கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை - cover

தெய்வங்களின் திருவிளையாடல்கள் - கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை

Tiger Rider, Saji Madapat

Editorial: Tiger Rider

  • 0
  • 0
  • 0

Sinopsis

இடைவேளை முடிந்து விட்டது, அமெரிக்கா! 
 
ஹே ஹேய்! நாம் புதிய உலக ஒழுங்கின் மத்தியில் இருக்கிறோம்!
 
பேரரசுகள் எழும், வீழும், சரியும். ரோமானியர்கள், ஒட்டோமனியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என வரலாறு இந்த சுழற்சியைக் கண்டுள்ளது. அவர்கள் எல்லோரும் கவிழ்க்கப்பட்டார்கள், நாம் கவனமாக இல்லையென்றால், அடுத்து அமெரிக்காவுக்கும் அது ஏற்படும்.  
 
இன்று பல நிறுவனங்களும் கடனுக்கு அடிமையாகி, நிதி-உபாயங்களின் கூடாரத்தில், வெதுவெதுப்பான எண்ணெய் குளியலில் நீந்தும் தவளைகளின் கதிக்கு ஆளாகியுள்ளன. துரதிருஷ்டவசமாக, இவற்றில் பல அறிவுசார் சொத்துரிமையைக் கவ்விய கழுகுகளின் பிடியில் நிர்கதியாய் கேட்பாரற்று போகலாம்.
 
 நம்முடைய துருப்புச் சீட்டுக்களை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால், அகோரப் பசி கொண்ட அடுத்த பேரரசு — சீனாவின் மத்திய சாம்ராஜ்ஜியம் — அமெரிக்காவிடம் இருந்தும் மற்றும் 2008 பொருளாதார சுனாமிக்குப் பின்னர், “பெல்ட் & ரோட் முன்முயற்சி” (bri) முதல் அதன் “டிஜிட்டல் சில்க் ரோட்” (dsr) வரையிலான திட்டம் மூலமாக அது பொருளாதார ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் காலனித்துவப்படுத்தி உள்ள இன்னும் நூற்றுக் கணக்கான மற்ற நாடுகளிடம் இருந்தும் தவணைகளை வசூலிக்க அவர்களின் தண்டல்காரர்களை அனுப்பி, நம்மை விழுங்கிவிடும். 
 
“மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்காக” — மேலும் எதிர்வரும் காலத்தில் ஏற்படவிருக்கும் நான்காம் ரீஹ்ஹில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக ரூஸ்வெல்ட் ஆண்டுகளின் சிந்தனைகள், வெற்றிகள் மற்றும் உத்வேகங்களைப் பின்பற்றி, “அமைப்பை மீண்டும் மகத்தானதாக ஆக்குதல்” முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்களைத் தோண்டி எடுக்கிறது.
 
ஆம்! இடைவேளை முடிந்துவிட்டது, அமெரிக்கா!
Disponible desde: 04/03/2022.
Longitud de impresión: 192 páginas.

Otros libros que te pueden interesar

  • Sridhar Vembu - Saathanai Vaazkkai - ஸ்ரீதர் வேம்பு - சாதனை வாழ்க்கை - cover

    Sridhar Vembu - Saathanai...

    G.S.Sivakumar

    • 0
    • 0
    • 0
    Sridhar Vembu - Saathanai - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios storeஉலக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்றவர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள். இந்த வரிசையில் ஓர் இந்தியர் அதுவும் தமிழர் ஒருவரும் இருக்கிறார். ஆச்சரியமாக உள்ளதா? அவர்தான் ஸ்ரீதர் வேம்பு. காவேரிக் கரையிலிருந்து கலிஃபோர்னியா வரை சென்று கலக்கிவிட்டு இன்று தாமிரபரணிக் கரையில் இருந்து அலுவலக ரீதியாக இயங்கி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற ஸோஹோ (Zoho Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியவர் இவரே. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் வாழ்க்கைப் பயணம் சாதாரணமானதல்ல. இந்த நிலைக்கு அவர் வந்ததற்குப் பின்னால் உள்ள அவரது உழைப்பும் தியாகமும் பலர் அறியாதது. இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையின் ஊடாகச் சென்று அவரது பயணத்தைப் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் கனவு, அதை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இடர்கள், சந்தித்த சவால்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உருவான சிக்கல்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்நாட்டின் கிராமங்களில் அவர் உருவாக்கிய தொழில்நுட்பப் புரட்சி, இந்தியாவின் குறிப்பிடத்தக்கப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தும் இன்று ஒரு கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்வதின் பின்னணி என ஸ்ரீதர் வேம்புவின் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், தொழில்நுட்பத் துறையில் சாதிக்க வேண்டுவோர்க்கு வழிகாட்டியாகவும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாகவும் அமையும். எழுத்தாளர் ஹரன் G.S.Sivakumar எழுதி , Sri Srinivasa வாசிப்பில் Swasam பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.
    Ver libro
  • Indiavai Athira Vaitha Nithi Mosadigal - இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் - cover

    Indiavai Athira Vaitha Nithi...

    N. Gopalakrishnan

    • 0
    • 0
    • 0
    இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. 
    இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன். 
    சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 
    ஹர்ஷத் மேத்தா 
    நிரவ்மோடி 
    டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) 
    சாரதா சிட்ஃபண்ட்ஸ் 
    சந்தா கோச்சார் 
    கார்வி 
    கேதன் பரேக் 
    எ.பி.ஜி ஷிப்யார்ட் 
    கிங் பிஷர் நிதி மோசடி 
    மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • Motivation (Tamil) - Ookkuvippu - cover

    Motivation (Tamil) - Ookkuvippu

    Brian Tracy

    • 0
    • 0
    • 0
    As a manager, one of your most important responsibilities is to motivate your employees to do their absolute best. Managers who create positive, rewarding, high-energy environments reduce absenteeism and turnover while dramatically increasing productivity and quality. Packed with proven tools and strategies, this essential guide helps any manager deliver a shot of adrenaline straight to the heart of his or her work team.
    
    ஒரு மேலாளராக, உங்கள் ஊழியர்களின் முழுமையான திறன்களை செயல்படுத்த ஊக்குவிப்பதே உங்கள் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும். நேர்மறையான, பலனளிக்கும், உயர் ஆற்றல் சூழல்களை உருவாக்கும் மேலாளர்கள், உற்பத்தித்திறனையும் தரத்தையும் வியத்தகு முறையில் அதிகரிக்கும். நிரூபிக்கப்பட்ட கருவிகள் மற்றும் உத்திகள் நிறைந்த இந்த அத்தியாவசிய வழிகாட்டி எந்தவொரு மேலாளருக்கும் தனது பணிக்குழுவை திறமையாக ஊக்குவிக்க உதவும்.
    Ver libro
  • Panam Padaikkum Kalai - cover

    Panam Padaikkum Kalai

    N. Chokkan

    • 0
    • 0
    • 0
    நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். 
    நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். 
    பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது. 
    No matter what your primary profession is, managing money is your second one. 
    To protect and grow what you earn, you need to get your finances right—and that responsibility falls squarely on your shoulders. 
    Personal financial management may seem complex, but it’s entirely learnable. The challenge is that our education system, families, and social structures rarely teach us the basics. As a result, most people either struggle through trial and error or rely on others, often suffering for years due to preventable financial mistakes. 
    This book demystifies the core principles of personal finance—earning, spending, saving, investing, borrowing, repaying, and planning for the future—in a clear, accessible style. It’s not a book of dry definitions. It’s a practical guide designed to help you build your own action plan for financial well-being and long-term growth.
    Ver libro
  • Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal - தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் - cover

    Vendrargal Nindrargal -...

    Jayaraman Raghunathan

    • 0
    • 0
    • 0
    Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல, ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான். பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக் கணக்கில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிக் கதைகளைப் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம். தமிழ்நாட்டில் இத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தைத் தருகிறது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல். இந்தியத் தொழில்முனைவோர்கள் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் அதிகம் பேசப்படவில்லை என்னும் குறையைக் குறைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். தொழிலில் வென்றவர்களின் கதைகளோடு, வெல்லப் போராடியவர்கள் மற்றும் இன்றைய புதிய முகங்களைப் பற்றியும் ஆசிரியர் சொல்வதால், தமிழ்நாட்டுத் தொழில்துறை பற்றிய வரலாற்றுப் பார்வையையும் இந்தப் புத்தகம் தருகிறது என்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன்.எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • Time Management (Tamil) - Nera Nirvaagam - cover

    Time Management (Tamil) - Nera...

    Brian Tracy

    • 0
    • 0
    • 0
    பிரையன் டிரேசி வெற்றி நூலகம்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.
    அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள 'நேர நிர்வாகம்' எனும் இந்தச் சுருக்கமான வழிகாட்டி நூல், நீங்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணிநேரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரையன் டிரேசி உட்பட, வெற்றியாளர்கள் பலரும் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற உத்திகள் இவை.
    Ver libro