Sri Annai
Thiruppur Krishnan
Narratore Thiruppur Krishnan
Casa editrice: Storyside IN
Sinossi
வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள். எதிர்காலத்தில் ஸ்ரீ அன்னை நெறியின் தேவை இன்றுள்ளதை விட இன்னும் அதிகமாகும். ஸ்ரீஅன்னையைத் தேடிவரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதை இப்போது காண்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதை எதிர்காலம் காணும். ஜாதி மதங்களில் ஏற்றத் தாழ்வு காணாதவர்கள், தீண்டாமை ஒரு கொடிய பாவம் என்பதை உணர்ந்தவர்கள், பெண்களும் ஆன்மிகத்தில் ஆணுக்கு நிகராகவும் மேலாகவும் உயரலாம் என்ற கோட்பாட்டை ஏற்பவர்கள் என இவர்களெல்லாம் இந்தப் புத்தகத்தை கேட்கும் தகுதி படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் இதயங்களில் இந்தப் புத்தகம் மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும். ஸ்ரீஅன்னையின் பரிபூரண அருள் இந்த நூலின் வாசகர்களுக்குக் கிட்டுமாக.
Durata: circa 2 ore (02:21:32) Data di pubblicazione: 15/05/2022; Unabridged; Copyright Year: 2022. Copyright Statment: —

