பாப விமோசனம்
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.ஐந்தாவதாக,“வாணி!”வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!கதவைத் தள்ளித் திறந்தாள்.“யெஸ் கம் இன்!”நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!‘ரயிலில் பார்த்த அவன்!’‘பால் கொண்டு வந்த அவன்!’‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!“ஒக்காருங்க!”லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.சட்டென எழுந்தான்
