மன்மத ஜாடை!
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு மதன் காரோடு வந்து நின்றான். உள்ளே வந்தான்.அம்மா அவசரமாக வரவேற்றாள்.“காபி கொண்டு வர்றேன் மாப்ளை. ரோகிணி! ரெடியாம்மா?”“வந்துட்டேன்மா!”ரோகிணி லேசாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.“போகலாமா? ஆன்ட்டி! காபி எதுவும் வேண்டாம். வெளில சாப்பிட்டுக்கிறோம். ஒன்பது மணிக்குக் கொண்டு வந்து விட்டுர்றேன்.”இருவரும் காரில் ஏற, அம்மா கையசைத்தாள்.நேராக கடற்கரைக்கு வந்து விட்டார்கள்.ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.“எனக்குக் கூட ரெண்டு வருஷ வெளிநாட்டு பிராஜக்ட் வரும் போலிருக்கு.”“ரெண்டு வருஷமா?”“கவலைப்படாதே! உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன். கூட்டிட்டுத்தான் போவேன். இதுவரைக்கும் சின்ன பிராஜக்ட்ல ஒரு மாசம், ரெண்டு மாசம்னு தான் போயிருக்கேன்.”“நாமும் போயிட்டா, இங்கே பெரியவங்க கஷ்டப்பட மாட்டாங்களா?”“என்ன கஷ்டம்? சொளை, சொளையா பணம் வருது. மனுஷங்களை விட பணம்தானே முக்கியம்.”“அப்படி சொல்லாதீங்க.“இல்லை ரோகிணி. இப்ப உங்கக்கா வெளிநாட்ல போய் பல ஆயிரங்களை சம்பாதிக்கற காரணமாத்தான் நீங்கள்ளாம் செழிப்பா இருக்கீங்க. ‘போதும்டி! விட்டுட்டு வந்துரு’னு உங்கள்ள யாராவது ஒருத்தர் சொல்வீங்களா?”ரோகிணி பேசவில்லை.“இதப்பாரு! இந்த உலகமே பாசாங்குல ஓடுது. கூடாது. மனசுல உள்ள எண்ணங்களை, புதைஞ்சு கிடக்கற விகாரங்களை வெளில கொண்டு வந்துடணும். நாம மறைச்சாலும் ஒருநாள் அது தானாவே வெளில வந்துடும்.”அவள் மௌனமாக இருக்க,படக்கென மதன் அவள் மடியில் படுத்து விட்டான்.ரோகிணிக்கு ஒரு கணம் உதறி விட்டது உடம்பு!சட்டென அவன் தலையைத் தள்ளிவிட்டு விலக, மதனின் தலை மணலில் பட்டது.அவனுக்குக் கோபம் வந்து விட்டது.“என்ன ரோகிணி இது?”“வேண்டாங்க!”“என்ன வேண்டாம்? உன் மடில நான் தலை வச்சது தப்பா?”“தப்புதாங்க! நமக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகு இந்த மாதிரி உரிமைகளை நீங்க கேக்க வேண்டாம். எடுத்துக்கலாம். ஆனா, இப்ப இல்லை.”“நீ எந்தக் காலத்துல இருக்கே?”“காலம் எதுவானாலும் பண்பாட்டை மதிக்கிறதில்லையா? நான் ஒரு பொண்ணு! அதை மறக்கக் கூடாதில்லையா?”“பாட்டி மாதிரி பேசறே!“தப்பில்லைங்க. தரகர் எனக்கு வரன் பார்க்கும் போது என்ன சொன்னார்? உங்க குடும்பம், மானம் மரியாதைனு ரொம்பவே பார்க்கற குடும்பம்னு சொன்னார். அதுக்குத் தோதா நான் இருக்க வேண்டாமா?”“பாட்டியம்மா மன்னிச்சுடு. மடினு ஒண்ணு ஒடம்புல இருக்கறதையே இனி நான் மறந்துடுவேன்.”ரோகிணி வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.“ஓக்கே! உனக்குப் புடிக்கலைனா வேண்டாம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னால அத்துமீறினா, அதுல ஒரு திரில் இருக்கு.”“வேண்டாம். ஆம்பிளைங்க எப்ப வேணும்னாலும் வேலி தாண்டலாம். சமூகம் அதைப் பெரிசுபடுத்தாது. பொண்ணுங்க கதை அப்படி இல்லை. சரி! உங்க குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க.”“அப்பா - அம்மா இருக்காங்க. எந்தப் பிரச்னையும் தராதவங்க. நல்லவங்க. ஒரு அக்கா. அவ டில்லில இருக்கா. ரெண்டு பசங்க. பள்ளிக் கூடத்துல படிக்கறாங்க. ஒரு தம்பி. அகமதாபாத்ல எம்.பி.ஏ., பண்றான். நான் மட்டும் எங்க அம்மாவுக்கு ஸ்பெஷல். அதனால ஒரு சின்ன பொஸஸிவ் இருக்கும். நீ பார்த்து நடந்துக்கோ. அதிகபட்ச உரிமைகள்தான் மாமியார் - மருமகள் பிரச்னைக்கு வேர்.”“என்னால எந்த பிரச்னையும் வராது. உங்கம்மா மடிதான் முதல். புரியுதா?”“மறுபடியும் மடியா?”“ச்சீ! போங்க.”“சரி! மெதுவா போயிட்டு, எங்கியாவது சாப்டுட்டு, உன்னை உங்க வீட்ல ட்ராப் பண்றேன்.”இருவரும் ஒரு நல்ல ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டார்கள்.ஒன்பது மணிக்கு வீடு திரும்பி விட்டார்கள்.
