மார்'கிழி' மாதம்
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
தூக்கம் கலைந்ததும்.வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. ‘திக்’கென்றது ரேஷ்மாவுக்கு.அவசரமாக விளக்குகளை உயிர்ப்பித்தாள்.மேஜையின் மேலிருந்த தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு...டிபன் முடித்து, அறைக்கு வரும் போது மணி ஒன்பதரை இப்போது ஏழா? இத்தனை நேரமா தூங்கியிருக்கிறேன்?டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் பார்த்த போது, முகம் சற்று உப்பிச் சிவந்து, தூக்கம் அதிகம் என்பதைக் காட்டியது.‘எங்கே சௌத்ரி?’‘ஒரு மணி நேரத்தில் வருவதாக, ஒன்பதரைக்குச் சொல்லிவிட்டுப் போனவர், இன்னுமா வரவில்லை? வந்தால், கதவைத்தட்டி அழைக்க மாட்டாரா?’திகீரென்றது.அழுகை உடைத்துக்கொண்டு புறப்பட்டது.சற்று விலகி நின்ற கதவு திறந்தால், பால்கனி என்று காலையிலேயே கவனித்திருந்தாள்.திறந்தாள்...சோடியக் கண்கள் விழித்துக்கொண்டு, இரவு நேரச் சென்னை அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கநிற்கப் பிடிக்காமல் உள்ளே வந்தாள்.அடி வயிறு கலங்கியது.‘இத்தனை நேரமாக, சௌத்ரிக்கு என்ன வேலை?’‘சென்னை எனக்கு புதிது... இந்த ஊர் மொழியும் தெரியாது என்றெல்லாம் புரிந்துமா சௌத்ரி...?’‘நோ... அப்படி இருக்க மாட்டார் சௌத்ரி!’‘கோரமாண்டல் எக்ஸ்பிரஸில், என்னைவிட்டு அங்குலம் அசையாத சௌத்ரியா, தனியாக ஓட்டல் அறைக்குள் விட்டு விட்டு?’‘சௌத்ரிக்கு எதுவும் விபத்தா?’நினைத்த போதே, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.தடாலெனக் கீழே உட்கார்ந்தாள்.நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.இன்னும் வரவில்லை சௌத்ரி.‘ஓட்டல் ரிசப்ஷனில் கேட்கலாமா?’‘அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும்? ‘விஸிட்டிங் கார்ட்’ அடிக்க, நல்ல பிரஸ்ஸா பார்க்கணும் என்று சொல்லிப் போனவர் தானே?’‘சென்னையில் எத்தனை பிரஸ்? தெருத்தெருவாகத் தேட முடியுமா?’‘போலீஸில் புகார் செய்யலாமா?’‘ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை இன்ஸ்பெக்டர் கற்பழித்ததாக போனவாரம் செய்தி படித்ததிலிருந்தே, போலீஸ் மேலிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது‘இந்த ஒரு இரவு, பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் யோசிக்கத் தொடங்கலாம்’ ‘தனக்கெப்படி, இத்தனை தைரியமும் தெளிவும் ஏற்பட்டது என்று ரேஷ்மாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.’‘தூக்கம் மட்டும் வரவில்லை.’எப்படியும் சௌத்ரி, நள்ளிரவானாலும் வந்துவிடுவான் என்ற கடைசி நம்பிக்கையும் செத்தபோது இரவு மணி இரண்டு. ஒரு மாதிரி மரத்துப் போயிருந்தாள்.பகல் வெகு நேரம் உறங்கியதற்கான தண்டனையை விடிய விடிய அனுபவித்தாள்.ஒரு வழியாக விடிந்தும் விட்டது.‘இனி யோசிக்க வேண்டும்!’‘சென்னையில், தனக்கு யாரைத் தெரியும்?’‘உறவும் இல்லை... ஸ்நேகிதி...’ சட்டென் தன் பேனா நண்பி சுலோவின் நினைவு வந்தது. அவசரமாக டைரியைப் பிரித்து, சுலோவின் விலாசத்தைத் தேடி சேகரித்துக் கொண்டாள்.‘இதுவரை நேரில் பார்த்திராத சுலோவிடம், முதல் சந்திப்பிலேயே, என் கணவனைக் காணவில்லை என்று சொல்ல முடியுமா?’‘நேரில் பார்க்காவிட்டாலும், கடிதம் மூலம் சுலோவிடம் அப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நிஜம்தான்’‘சௌத்ரியை திருமணம் செய்து கொள்ள முடிவானதும், முதலில் சுலோவுக்குத்தானே எழுதினாள்? இனி கல்கத்தாவில் இருக்க மாட்டேன், ஊட்டி போனதும், புது முகவரி தருகிறேன் என்று போன வாரம்தானே எழுதினாள்?’பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாகத் தயாரானாள். அறையைப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து, ஆட்டோவை அழைத்து, சுலோவின் விலாசம் சொன்னாள்
