Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கோடைத் தள்ளுபடி - cover

கோடைத் தள்ளுபடி

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

நரேனைப் பிடித்து தீபா விளாசிக் கொண்டிருந்தாள், கடற்கரையில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில்!
 
அவனிடம் அதே மௌனம்!
 
“சரி! எங்கம்மா பார்த்த ஆளைக் கட்டிக்கிட்டு நான் புறப்பட்டுப் போறேன்!”
 
“அப்படி நான் விட்டுடுவேனா?”
 
“வேற என்ன கிழிச்சிங்க? இப்படி ஆமையா இருந்தா நான் என்ன செய்வேன்?”
 
“ஓட்டல்ல ரூம் போடட்டுமா?”
 
“எதுக்கு?”
 
“நீயும் நானும் கணவன்-மனைவியா ஒரு ராத்திரி வாழ்ந்துடலாம். அப்புறம் எப்படி உன் கல்யாணம் நடக்கும்?”
 
தீபா முகம் சப்பென மாறியது!
 
“இப்படி பேச உங்களுக்கு வெக்கமால்லை? எப்படி இத்தனை கீழ்த்தரமா ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?”
 
“தீபா!”
 
“நேரடியா காதலைச் சொல்லி, அதுக்காகப் போராடி, என் கழுத்துல ஒரு தாலியைக் கட்டியிருந்தா, நீங்க சரியான ஆம்பிள! அதை விட்டுட்டு கேவலமான வழியை ஏன் தேர்ந்தெடுக்கணும்?”
 
“விடு! ஏன் கோவப்படற?”
 
“நியாயமான வழியைச் சொல்லுங்க!”
 
“ஒரே வழி ஓடிப்போறதுதான்! ஒரு கோயில்ல வச்சு தாலியைக் கட்டிட்டு பெரியவங்க கால்ல போய் விழவேண்டியதுதான்!”
 
“இது தப்பில்லை! ஆனா இதைவிட கண்யமா நாம சேர முடியாதா?”
 
“எப்படி?”
 
“எங்க வீட்டுக்கு நீங்க வந்து அம்மாகிட்டப் பேசுங்க! என்னைக் கேளுங்க!”
 
“செருப்பால அடிப்பாங்க! உன் கல்யாணத்தை அவங்க நிச்சயிச்ச நேரம், நான் வந்து பெண் கேட்டா சரிப்படுமா? ஒரு நாள் அவகாசம் குடு! வேற ஏதாவது யோசிச்சுச் செய்யலாம்! உனக்குத்தான் நிச்சயமாகியிருக்கு! நீதான் ஏதாவது செஞ்சு நிறுத்தப் பாக்கணும்!”
 
“எப்படி?”
 
“அந்தப் பையன சந்திச்சு பேசிடேன்!”
 
தீபா நிமிர்ந்து உட்கர்ந்தாள்.
 
“இது நல்ல யோசனையா இருக்கே!”
 
“உடனே செயல்படுத்து!”
 
தீபா வீடு திரும்பி விட்டாள்.
 
‘அந்த சபரிஷை சந்தித்துப் பேசுவது நல்ல ஐடியாதான்! ஆனால் அதை நிதானமாக, பக்குவமாகச் செய்ய வேண்டும். முடியுமா?’
 
இரவு முழுக்க உறங்காமலே யோசித்தாள். மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.
 
காலை வழக்கம் போல புறப்பட்டாள்.
 
வகுப்புக்குப் போகவில்லை!
 
சபரிஷின் விப்ரோ விலாசத்துக்கு - தேடிப்பிடித்து வந்து விட்டாள். வரவேற்பில் சொல்லி விட்டுக் காத்திருந்தாள்.
 
சபரிஷ் வந்தான்.
 
இவளைப் பார்த்ததும் ஆச்சர்யம்.
 
“தீபா...! நீயா?”
 
“உங்ககிட்ட நான் பேசணும் சபரிஷ்!”
 
“என் ரூம் இருக்கு. யாரும் வரமாட்டாங்க! உள்ளே வா...!”
 
அவனைப் பின்பற்றி நடந்தாள். அவளை உட்கார வைத்து குளிர்பானத்துக்குச் சொன்னான்!
 
“நீ என்னைத் தேடி வருவேனு நான் கொஞ்சம்கூட எதிர்பாக்கலை தீபா!”
 
அவனை ஒரு நொடி பார்த்தாள் தீபா!
 
“என்னை மன்னிச்சிடுங்க சபரிஷ்!”
 
“எதுக்கு?”
 
“எனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை! நான் சொல்லியும் கேக்காம எங்கம்மா அவசரப்பட்டு தாம்பூலம் மாற்றி தேதியும் குறிச்சாச்சு! வாழப்போறவ நான்! இது நியாயமா?”
 
அழத் தொடங்கினாள்
Disponibile da: 03/02/2024.
Lunghezza di stampa: 85 pagine.

Altri libri che potrebbero interessarti

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro