காணும் விழி நான் உனக்கு!
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
காயம் சுமந்தகற்பனைகள்இருட்டுக்குள் நுழைந்தஇதயம்விரலை மறந்த வீணைவிதியின் மூத்த பிள்ளைநான்.அயர்ந்து போனாள் மாதவி. உணவு இடை வேளையில், வாரப் பத்திரிகையை புரட்டிக் கொண்டிருக்கும்போது, இடையில் இருந்தது மடிக்கப்பட்ட ஒரு காகிதம்.பிரித்தால்,சுகமான இந்தக் கவிதை!“ஜனனி... இங்க வாயேன்!”“என்ன மாதவி?”“கவிதை எழுத வருமா உனக்கு?”“அந்த மாதிரி தப்புகளையெல்லாம் செய்யறதுக்குன்னே பிறந்த ஒரு ஜீவன் எங்க வீட்ல இருக்கு. புத்தகத்துக்குள்ள இருந்ததா?”“ம்! யாரது?சாட்சாத் எங்கண்ணன்.”“வாவ்! அவரை நான் பார்கணுமே”“நீ பார்க்கலாம். ஆனா அவனால உன்னைப் பார்க்க முடியாது. குருடன் அவன்.”“ஷ்! ‘பார்வை இல்லாதவர்’னு நாசூக்கா சொல்லேன்.”“சரி ஏதோ ஒண்ணு!”“நிறைய எழுதுவாரா? அவரேவா?”“ம்! ப்ரெய்ல் மூலம் படிக்க எழுத கத்துக்கிட்டான். வேலை பார்க்க வேற ஆசை. எங்கப்பா அனுமதிக்கலை. பிறவிக் குருடன் சந்துரு.”“நான் அவரைப் பார்க்க முடியுமா?”“எந்த நேரமும் வீட்ல உட்கார்ந்து எதையாவது கிறுக்கிட்டு இருப்பான். பத்திரிகைக்குப் போடச் சொல்லுவான். வேற வேலையில்லை. குப்பைத் தொட்டிக்கு நல்ல தீனி.”உடம்பு திகுதிகுவென எரிந்தது மாதவிக்கு.‘ச்சே! என்ன பெண் இவள்? கவிதை குணம் கொண்ட ஒருவனைப் புரிந்து கொள்ள ஏன் இவளால் முடியவில்லை? இவள் மட்டும்தான் இப்படியா? வீட்டில் எல்லாருமா?’‘இருட்டுக்குள் நுழைந்தஇதயம்விதியின் மூத்த பிள்ளைநான்!’காயத்தில் கசிந்த வரிகள்.‘இவனை சந்திக்க வேண்டும்!மாலை மூன்று மணிக்கு வந்து, “நான் பர்மிஷன்ல போறேன் மாது.”“வீட்டுக்கா ஜனனி?”“ம்!”“நானும் வரலாமா உன்னோட? உங்கண்ணனை நான் பார்க்கணும்.”“பைத்தியமா உனக்கு? சரி வா.”ஜனனியுடன் புறப்பட்டாள். வீடு ராஜா அண்ணாமலை புரத்தில் சற்று வசதியான பிரதேசத்தில் இருந்தது.ஜனனியின் அம்மா மட்டும் இருந்தாள் வீட்டில்.“அம்மா, இவ மாதவி. சந்துருவோட கவிதைகளைப் பாராட்ட வீடு தேடி வந்திருக்கா.”“அவனுக்கு கண்ணு தெரியாதுனு சொன்னியா?”“ம். வா மாதவி. நீ சந்துருகூட பேசிட்டு இரு. அதுக்குள்ள நானும், அம்மாவும் ஷாப்பிங் போயிட்டு வந்திர்றம்.”உள்ளே நுழைந்தார்கள்.“சந்துரு! உன்னைப் பார்க்க ஒரு பைத்தியம் வந்திருக்கு. உனக்கு கூட நாட்ல ஒரு ரசிகை. எல்லாம் நேரம். வர்றேன் மாதவி”“வணக்கம். வாங்க.”கரம் குவித்தான்.திருத்தமாக இருந்தான். பார்வை மட்டும்தான் இல்லை. முகத்தில் களை இருந்தது
