Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
இரும்புத் திரை! - cover

இரும்புத் திரை!

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

மறுநாள் ஹரி சீக்கிரமே ஆபீசை விட்டு வெளியே வந்து விட்டான்!சந்தியா காரில் காத்திருந்தாள்.ஹரி ஆபீசில் பளிச்சென்று தன்னைத் தயார் செய்து கொண்டுதான் வந்தான்!சந்தியா ஏற இறங்கப் பார்த்தாள்.“ஏன் அப்படி பாக்கறே?”“ரொம்ப அழகா இருக்கீங்க! இந்த மாதிரி எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தரை மாப்பிள்ளையா யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க?”ஹரி சிரித்தான். கார் புறப்பட்டது.பங்களா கேட் திறக்க, உள்ளே அரை கிலோ மீட்டர் ஓடி கார் நின்றது. சுற்றிலும் பூந்தோட்டம். வளமான - செழிப்பான நாய்கள் இரண்டு காதை விடைத்துக் கொண்டு நிற்க, ஹரி மிரண்டான்!“ஒண்ணும் செய்யாது! தைரியமா வாங்க!”அவளது பார்வையில் நாலு கால் ஜீவன்கள் அடங்கிப் போக, ஹரியுடன் உள்ளே நுழைந்தாள் சந்தியா.உட்கார வைத்தாள். மாளிகைதான்! பிரமிப்பின் உச்சியில் இருந்தான் ஹரி.“அம்மாவை வரச் சொல்றேன்!” - சந்தியா உள்ளே போனாள். ஹரி பார்த்துக் கொண்டே இருந்தான்.சந்தியாவுடன் அந்தம்மா வர, ஹரி எழுந்து நின்று கை கூப்பினான். வசுமதியும் கை கூப்பினாள்.“உட்காருங்க தம்பி!”ஹரி உட்கார்ந்தான். எதிரே வசுமதி கால் மேல் கால் போட்டு உட்கார, அருகில் சந்தியா!ஒரு நொடியில் ஹரியை தன் கண்களால் ஸகேன் பண்ணி விட்டாள் கோடீஸ்வரி வசுமதி!ஹரிக்கு குளிர்பானம் வந்தது.“சாப்பிடுங்க!” - அதை முடிக்கும் வரை காத்திருந்தாள் வசுமதி!“சந்தியா நேத்திக்கு வந்து சொன்ன இந்த 24 மணி நேரத்துல உங்களைப் பற்றி முழுமையா விசாரிச்சிட்டேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு! எல்லா தகுதிகளும் உள்ள ஒரு இளைஞனைத்தான் என் மகள் தேர்ந்தெடுத்திருக்கா! என் மாப்பிள்ளையா உங்களை ஏத்துக்க எனக்கு சம்மதம்!”சந்தியா உற்சாகமாகி விட்டாள்.ஹரியின் முகமும் மலர்ந்தது!“ஆனா சில நிபந்தனைகள் இருக்கு தம்பி!”“என்ன?”“முதல்ல உங்கப்பா சம்பந்தம் பேச இங்கே வரணும். அவர் கிட்ட நான் பேசுவேன்! நாளைக்கு நல்ல நாள்! உங்கப்பா வரமுடியுமா?”“கேக்கறேன்!”“நாளைக்கு விட்டுட்டா, ஒரு மாசத்துக்கு நாட்களும் சரியா இல்லை! எனக்கு நேரமும் இல்லை!”“சரி! நான் அவரைக் கூட்டிட்டு வர்றேன்!”“அவ்ளோதான்! பேசி முடிச்சிட்டா, இந்த மாசக் கடைசில கல்யாணத்தை முடிச்சிடலாம்!”அந்தம்மா எழுந்து உள்ளே போய் விட்டாள்.சந்தியா அருகில் வந்து உட்கார்ந்தாள்.“பாத்தீங்களா? எங்கம்மா பச்சைக் கொடி காட்டிட்டாங்க! நியாயமான ஆசைகளை அம்மா மறுக்கவே மாட்டாங்க!“இரு சந்தியா! எங்கப்பா கிட்ட இனிமேல்தான் நான் பேசணும்!”“பேசுங்க! நாளைக்குத் தானே கூட்டிட்டு வரணும்?”ஹரியிடம் ஒரு கலக்கம் இருந்தது.“என்ன ஹரி?”“தங்கச்சி ராதிகா கல்யாணம் முடியாம, எனக்கு நடத்த அப்பா ஒப்புக்கணுமே!”“தப்பு ஹரி! இந்த எண்ணம் இருந்திருந்தா, ராதிகா கழுத்துல தாலி ஏறின பிறகுதான் நீங்க காதலிக்கவே தொடங்கியிருக்கணும்!”“என்ன சந்தியா இப்படி பேசற?”“முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னால யோசிக்கணும். எடுத்த பிறகு எது வந்தாலும் ஏத்துக்கணும்! இது எங்கம்மா கத்துக் குடுத்த பாடம்! புறப்படுங்க!”ஹரி காரில் ஏறினான்.“டிரைவர்! அவரை வீட்ல விட்டுட்டு வந்துடுங்க!”சந்தியா உத்தரவிட்டாள். கார் புறப்பட்டது!தன் வீட்டு வாசலில் ஹரி வந்து இறங்க, அப்போதுதான் காய்கறிக் கூடையுடன் அப்பா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.நேரம் எட்டு மணி - இரவு!“கம்பெனி கார்ல உன்னை ட்ராப் பண்ணினாங்களா?”“இது கம்பெனி கார் இல்லைப்பா!”“ராதிகா! வெங்காயத்தை கட் பண்ணித் தர்றியா?”ஹரி முகம் கழுவி, பர்முடாஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 63 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre