Moongil Moochu - மூங்கில் மூச்சு
Suka
Narratore Suka
Casa editrice: itsdiff Entertainment
Sinossi
மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா? வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி. - வண்ணதாசன் சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை சுகாவின் குரலிலேயே கேட்கலாம் வாருங்கள்
Durata: circa 5 ore (05:26:16) Data di pubblicazione: 24/04/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

