Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஐ லவ் மை அப்பா - cover

ஐ லவ் மை அப்பா

Shelley Admont, KidKiddos Books

Maison d'édition: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Synopsis

குட்டி முயல் ஜிம்மிக்குத் தன் அண்ணன்களைப் போல மிதிவண்டியை நன்றாக ஓட்ட தெரியவில்லை.இதற்காக அவன் கிண்டல் செய்யப்படுகிறான். இதில்  அப்பா ஜிம்மிக்கு எப்படி புதிய விஷயங்களை பயமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காண்பிக்கும்போது தான் வேடிக்கையே தொடங்குகிறது.
இந்த குழந்தைகள் புத்தகம் சிறிய பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பின் பகுதியாகும்.
இந்த கதையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும்முன் வாசிக்கத் தகுந்தது மற்றும் இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்பத்துடன்  சேர்ந்து படித்து மகிழலாம்!!
Disponible depuis: 06/05/2024.
Longueur d'impression: 34 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Valmiki Ramayanam Part 5 - Sundara Kandam - cover

    Valmiki Ramayanam Part 5 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    சுந்தர காண்டத்தில்,  ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Voir livre
  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Voir livre
  • Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam - cover

    Valmiki Ramayanam Part 4 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Voir livre
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Voir livre
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Voir livre
  • Valmiki Ramayanam Part 1 - Bala Kandam - cover

    Valmiki Ramayanam Part 1 - Bala...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். 
    இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் பால காண்டத்தில் வால்மீகி ராமாயணம் உருவான கதையில் ஆரம்பித்து, தசரதர் அச்வ மேத யாகம் செய்ததன் மூலம் ஸ்ரீ ராமரும், அவரது சகோதரர்களும் பிறந்தது, விசுவாமித்திர முனிவர் பால ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தது, லக்ஷ்மணன் உடன் வர, அவருடன் வனம் சென்ற ராமன் தாடகையை வதம் செய்தது, விசுவாமித்திரரின் யாகம் காத்தது எல்லாம் சொல்லப்படுகிறது; பின் கங்கை பூமிக்கு வந்த கதை, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, அஹல்யை சாபம் பெற்ற கதை, ராமனின் பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது, ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலை சென்றது, அங்கே அவர்கள் விசுவாமித்திரரின் சரித்திரத்தைக் கேட்டறிந்தது, ராமன் சிவ தனுஸை ஒடித்து சீதையை மணந்தது, பின் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமரை வென்றது, அயோத்தியில் ராமனும் சீதையும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்கியது – ஆகியவரை பால காண்டத்தில் சொல்லப்படுகின்றன.
    Voir livre