Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
தப்பு + தப்பு = சரி - cover

தப்பு + தப்பு = சரி

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“திலகா...!”“என்ன ஷாம்...?”“வர்ற சண்டே கோவளம் போய்ட்டு வரலாமா?”“வர்ற சண்டேவா...?”“முடியாதே...!”“ஏன் முடியாது... அன்னிக்கு லீவுதானே...?”“லீவா...! லீவு என்கிற வார்த்தையே எங்க கம்ப்யூட்டர் லேப்ல கிடையாது. ரொம்பவும் அர்ஜெண்ட்ன்னா ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வெளியே போய்ட்டு வரலாம்.”“இது உலக மகா அநியாயம்...”“ஷாம்...! நான் இந்த கம்ப்யூட்டர் லேப்பில் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே இங்கே இருக்கிற காலண்டர்களை புரட்டிப் பார்த்தேன். சனி, ஞாயிறு நாட்களே கிடையாது... இங்கே வேலை நேரம் ஹவர்ஸ் கணக்குத் தான்...! எனக்கு இங்கே இருபதாயிரம் மணி நேரம் வேலை...”“அப்படீன்னா... நீ வெளியே வரவே முடியாதா?”“வரலாம்... ஆனா உன் கூட சேர்த்து ஜாலியா சுத்த முடியாது...”“அதாவது காதலிக்க முடியாதுன்னு சொல்றே...?”“ஷாம்...! ஜாலியா சுத்தினாத்தான் காதலா...? இப்ப போன்ல பேசிக்கறோமே இது கூட காதல்தான்...!“திலகா...!”“ம்…”“உன்னை 24 மணி நேரமும் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு”“நான் பாத்ரூம்கூட போக வேண்டாமா?”“ஜோக் அடிக்க இது நேரம் இல்லை திலகா. நீ அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகியிருக்கு. ஆனா 20 வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்...! உன்னைப் பார்க்காமே இருக்க முடியலை.”“ஷாம்...! பேத்தாதே... நான் ஒரு க்ளார்க் உத்தியோகமோ... முன்சீஃப் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமோ பார்க்க வரலை... மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒரு ரெப்யூட்டட் கம்ப்யூட்டர் லேப்பில் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னியாக, இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 20,000 மணி நேரம் வேலை பார்த்த பிறகுதான் நீயும் நானும் ஜாலியா வெளியே போக முடியும்...!”“ஒழிக...!”“யாரு...”“கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சவன்...!”திலகா சிரித்துக் கொண்டிருக்கும்போதே கம்ப்யூட்டர்க்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் கூப்பிட்டது.“ஷாம்...! எனக்கு என்னோட எம்.டி.கிட்டயிருந்து போன். நான் நாளைக்கு மறுபடியும் உனக்கு போன் பண்றேன்.”“அந்த எம்.டி.யும் ஒழிக...!”திலகா பலமாய் சிரித்து ரிசீவரை வைத்துவிட்டு இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். மறுமுனையில் எம்.டி. மஹாதேவ் குரல் கேட்டது.“திலகா...“ஸார்...”“அந்த எஸ்.க்யூ சர்க்யூட்டை பார்த்து முடிச்சுட்டியா?”“பார்த்துட்டிருக்கேன் ஸார்!”“அதுல ஒரு சின்ன கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போ. வரும்போது சர்க்யூட் சார்ட்டை கொண்டு வந்துடு...”“எஸ்... ஸார்...!” சொன்ன திலகா கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் நிறைந்த அந்த ஏ.ஸி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள்.சல்வார் கம்மீஸுக்குள் ஒரு சந்தன சிலையாய் தெரிந்த திலகாவுக்கு சற்றே நீள்வட்டமான சதைபிடிப்பு முகம். புருவம் மழித்த இடத்தில் வளையல் துண்டுகளாய் ‘ஐ’ப்ரோ பென்சிலின் உபயத்தில் தீற்றல்கள். சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் வெள்ளி சங்கிலி. லேசாய் உயர்த்திப் போட்ட கொண்டை. சென்னை நகர்க்குள் அழகிப் போட்டி நடத்தினால் சுலபமாய் மிஸ் சென்னை பட்டத்தை தட்டிக் கொண்டு வந்து விடுவாள். ரொம்ப நாட்களாய் ஆண்களை வெறுத்துக் கொண்டிருந்தவள் கடைசியில் ‘ஷாம்’ என்ற அழகான இளைஞனுக்கு தன் இதயத்தைத் தூக்கிக் கொடுத்தாள்.ஷாம்...?முழுப்பெயர் சாம்ராஜ். வயது 25. எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவன். பிடிக்காத மூன்று விஷயங்கள். 1. அரசியல். 2. பெரிய திரை. 3. சின்னத்திரை. பிடித்த மூன்று விஷயங்கள். 1. திலகா. 2. திலகா. 3, திலகா.தன்னுடைய கம்ப்யூட்டர் அறையிலிருந்து வெளிப்பட்ட திலகா ப்ளைவுட் தடுப்புகளாலான பல அறைகளைக் கடந்து கடைசியில் இருந்த எம்.டி.யின் அறைக்கதவுக்கு முன்பாய் நின்றாள். கதவை மெல்லத் தட்ட உள்ளேயிருந்து மஹாதேவ் குரல் கொடுத்தார்
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 69 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Voir livre
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Voir livre
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Voir livre
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukottai Prabakar

    • 0
    • 0
    • 0
    A famous music director is murdered. There are many suspects. There is a shocking end to the interrogation. Listen to Oru Poi Podhum to know who murdered the music director.
    
    ஓரு  பிரபலமான  இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில்  பல  பேர் மேல்  சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின்  முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Voir livre
  • Poovadi Sethil - cover

    Poovadi Sethil

    Ambai

    • 0
    • 0
    • 0
    மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் கதை இது.
    Voir livre
  • Aayiram Arivaal Kottai - cover

    Aayiram Arivaal Kottai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This story talks about the power of the Village God that stands surrounded by a fence made of weapons. The God is a guardian to all those who abide by the truth. What about those who lie? Listen to Aayiram Arivaal Kottai.
    
    ஒரு கிராமத்து சாமியின் சக்தியை சொல்லும் பரபரப்பான புதினம் இது. அரிவாளால் வேலி கட்டி நடுவில் நிற்கும் அந்த சாமி சத்தியமானது. சத்தியம் தவறுபவர்களுக்கோ அது எதிரானது. விறுவிறுப்பான கதை - ஆயிரம் அரிவாள் கோட்டை .
    Voir livre