Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
ஒரு நாள் ராஜாக்கள் - cover

ஒரு நாள் ராஜாக்கள்

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

ஜோஸ்மினா யூனிவர்ஸிட்டி ஹாஸ்டல்.இரவு மணி பத்தரை. அறை எண் 356ல் நான்கைந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும் தமிழ் பேச்சும் கேட்டுக்கொண்டிருந்தது.“சூர்யா...! இன்னொரு சர்தார்ஜி ஜோக் ப்ளீஸ்...”“என்கிட்ட ஸ்டாக் அவ்வளவுதான். வனிதாகிட்ட கேளு. அவ சொல்லுவா...”வனிதா சிரித்தாள்.“என்கிட்டேயும் ஸ்டாக் ஒவர். இளம்பிறைகிட்டே கேளு. அவ சொல்லுவா. அவதான் இந்த மாதிரியான ஜோக்குக்கெல்லாம் ஹோல் ஸேல் டீலர்”“என்கிட்டேயும் ஆல்மோஸ்ட் முடிஞ்சுது. ஊர்க்கு லெட்டர் எழுதி அக்காகிட்ட கேட்கணும்.”“தேடிப்பாரு... கிடைக்கும்...”“சரி... ஒரேயொரு ஜோக் மட்டும் இருக்கு. கொஞ்சம் பழசு. பரவாயில்லையா...?”“பரவாயில்லை. தூசு தட்டிட்டு சொல்லு...”இளம்பிறை சொன்னாள்.“ஒரு சர்தார்ஜி ஷெல்ப் ட்ரைவ் பண்ணிக்கிட்டு வேகமா போயிட்டிருந்தார். வழியில் School Zone. Go Slow' என்கிற போர்டை பார்க்க நேர்ந்தது. உடனே காரின்வேகத்தைக் குறைத்து காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தார். அப்போது நேரம் இரவு பதினோரு மணி.தும்பினாள் சூர்யா. “அம்மாடி! ரொம்ப தூசு. இவ்வளவு அரத பழசெல்லாம் வேண்டாம்... எனக்கு ஏற்கெனவே சைனஸ் ப்ராப்ளம்... இந்த தூசி தட்டற ஜோக்கெல்லாம் இனிமே வேண்டாம்.” வராந்தாவில் நடைச் சத்தம் கேட்டது.“வனிதா...! யார்ன்னு பாரு...?”வனிதா போய் எட்டிப் பார்த்துவிட்டு கையை உதறிக்கொண்டு உள்ளே வந்தாள்.“அய்யய்யோ...”“என்னடி...?”“வார்டன்...”“வார்டனா...? இந்நேரத்துக்கு வரமாட்டாங்களே? இந்தியாவிலிருந்து யார்க்காவது ஏதாவது மெஸேஜ் வந்திருக்கலாம்?”வார்டன் க்யூரி தன் இரட்டை நாடி உடம்போடு அறை வாசலில் வந்து நின்றாள்.“இளம்பிறை...!”“மேடம்...!”“என்னோடுவா...”இளம்பிறை குழப்பமாய் எழுந்தாள்.“என்னவிஷயம் மேடம்...?”“இங்கே எதுவும் கேட்காதே... வா என்னோடு...”வார்டன் க்யூரி நடக்க ஆரம்பித்துவிட, இளம்பிறை தொடர்ந்தாள். பாதி வராந்தாவைக் கடந்திருந்தபோது மறுபடியும் கேட்டாள்.“மேடம்! உங்கள் முகம் சரியில்லை. இந்தியாவிலிருந்து எனக்கு ஏதாவது கவலை தரும் செய்தியா?நான் இப்போது எதையும் பேசக்கூடிய நிலைமையில் இல்லை. உனக்காக போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபீஸ் அறையில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்...”“போலீஸா...?”“எஸ்...”“எதற்கு...?”“போனால் தெரிந்துவிடும்...”“மேடம்...! எனக்கு பயமாய் இருக்கிறது.”“எதற்கு பயம்...? இது ஒரு விசாரணைதான்”இளம்பிறைக்கு வியர்த்துக் கொட்டியது.'போலீஸ் எதற்காக என்னை விசாரிக்க வேண்டும்...?’ஆபீஸ் அறை வந்தது. கருநீல யூனிஃபார்ம் அணிந்த அந்த ந்யூயார்க் போலீஸ் அதிகாரி காரட் நிற முகத்தோடு நாற்காலிக்கு சாய்ந்திருந்தார். இளம்பிறையைப் பார்த்ததும் கலைந்தார்
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 61 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anonimo

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Mostra libro
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Mostra libro
  • Then Kizhakku Minnal - cover

    Then Kizhakku Minnal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Protagonist who lives in the US with his family is forced to come back to India as his son is dying of some weird disease. He is advised to pray to his family deity. He encounters various supernatural obstacles in his journey. Listen to Then Kizhakku Minnal.
    
    குலதெய்வ வழிபாடு - அதன் பின் உள்ள சக்தியை கூறிடும் நாவல். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கதாநாயகனின் மகனுக்கு விசித்திர நோய். குல தெய்வ வழிபாடு செய்தால் குணமாகும் என்கிறது ஜோதிடம். அதன் பொருட்டு இந்தியா வருபவனுக்கு விசித்திர சோதனைகள். அவ்வளவும் அமானுஷ்யம்!
    Mostra libro
  • Sivappu Iravu - cover

    Sivappu Iravu

    Anonimo

    • 0
    • 0
    • 0
    ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.
    Mostra libro
  • Kadathal Kaatru - cover

    Kadathal Kaatru

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
    Mostra libro
  • Abaaya Malli - cover

    Abaaya Malli

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    When horror meets Romance, it is Abaaya Malli! Are ghosts real? Ghosts are better than traitors! With research done on ghosts, this is an enthralling story!
    
    திகிலும் காதலுமான மர்மக்கதை. ஆவிகள் உண்மையா? ஆவிகளை விட கொடியவர்கள் துரோகிகள். ஒரு ஆவியுலக ஆய்வு கொண்ட பரபரப்பான புதினம்.
    Mostra libro