ஒற்றை மேகம்
ரமணிசந்திரன்
Casa editrice: Pocket Books
Sinossi
பூர்ணிமா லேசாய் பதட்டப் பட்டாள். "மெள்ளமா பார்த்து உட்கார்ங்க...""ஸ்லிப்பாகி கீழே விழுந்துடுவேனான்னு பயப்படறியா?""பின்னே...?""இந்த சக்கர நாற்காலியோட எனக்கு எத்தனை வருஷ ஸ்நேகம் தெரியுமா. நான் கீழே விழப்போனாலும் அது என்னை விடாது.""பெருமையடிச்சுகிட்டு இருக்காமே சீக்கிரமா பாத்ரூமுக்குப் போங்க."சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப்போன ராஜசேகரன் சட்டென்று நாற்காலியின் இயக்கத்தை நிறுத்தி திரும்பினான்."பூர்ணிமா.""ம்.""மத்தியான லஞ்சுக்கு இங்கிருந்தே கொண்டு போயிடுவோமா? இல்லே. எஸ்டேட் போய் பிரிப்பேர் பண்ணிக்குவோமா?""இங்கிருந்தே கொண்டு போயிடுவோம்.""குக்கிட்டே என்ன மெனு குடுக்கப் போறே?""சிக்கனும் சப்பாத்தியும் போதாது?""போதும்.""எனக்கு போதாது."குரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் நின்ற நவீனா - குளித்து முடித்து வேறு கவுனுக்குள் நுழைந்திருந்தாள். பூர்ணிமா அவளை நோக்கிப் போனாள்."என்னடி அதுக்குள்ளே குளிச்சிட்டியா?""ம். குளிச்சுட்டேன்""யார் குளிப்பாட்டிவிட்டா?""ஆயாதான்.""காதுல பார் சோப்பு.""துடைச்சுட்டா போகுது" அலட்சியமாய் சொன்ன நவீனா, ராஜசேகரினிடம் வந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்."டாடி.""என்னம்மா?""எனக்கு லஞ்ச் சிக்கனும் சப்பாத்தியும் வேண்டாம்.""பின்னே... உனக்கு என்ன வேண்டும்?""கட்லெட், வெஜிடபிள் புலவ், ஸாண்ட்விச் அப்புறம் ப்ரட்சோலா"பூர்ணிமா சுட்டு விரலை உயர்த்தினாள். "உதைப்பேன். அதெயெல்லாம் பிரிபேர் பண்ணச் சொன்னா நேரமாயிடும். சப்பாத்தி சிக்கன் மட்டும் போதும்.""பாருங்க டாடி" நவீனா இரண்டு கைகளாலும் ராஜசேகரனின் முகத்தை வருடினாள். அவன் அந்த கைகளைப் பற்றி மெள்ள முத்தமிட்டான்."என் நவீனாக்குட்டியோட மெனு ஓ.கே."என்னங்க இது. நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு...""இதோ பார் பூர்ணிமா...! எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. குக்கிட்டே உடனே சொல்லி இந்த மெனுவை பிரிபேர் பண்ணச் சொல்லு.""தாங்க்யூ டாடி!""இதோ பாருங்க. அவளுக்கு நீங்க ரொம்பவும் செல்லம் தர்றீங்க. ஒரு பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் குடுக்கக்கூடாது.""என் நவீனாக்குட்டிக்கு அப்படித்தான் செல்லம் குடுப்பேன்"பூர்ணிமா இடுப்பில் கைவைத்து முறைக்க --நவீனா கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள்." ஸேம்... ஸேம்..! மம்மிக்கு ஸேம்!"சரியாய் பத்து மணிக்கு போர்டிகோவில் நின்றிருந்த வெளிநாட்டு 'லாரல்' நிஷாந்த் கார் கிளம்பியது. பின்சீட்டில் ராஜசேகரனும், பூர்ணிமாவும் உட்கார்ந்திருக்க, முன்சீட்டில் டிரைவர் கோபாலுக்குப் பக்கத்தில் நவீனா சாய்ந்து ஆப்பிளைக் கொறித்துக் கொண்டிருந்தாள்."கோபால்!""ஸார்...!""டாப் காரியரில் வீல்சேரை நல்லா கட்டியிருக்கியா?""கட்டியிருக்கேன் ஸார்.""காரை நிதானமாவே ஓட்டு, எந்த வெஹிகிளையும் ஓவர்டேக் பண்ணாதே. மொதல்ல பாரடைஸ் பாயிண்ட் போறோம். அப்புறம்தான் எஸ்டேட்டுக்கு.""சரி சார்..."கார் நிதான வேகத்தில் - பனி பெய்து இன்னமும் ஈரமாயிருந்த ரோட்டில் வழுக்கிக் கொண்டு போயிற்று. கார் இரண்டு இறக்கங்களைக் கடந்தது -"டிரைவர் அங்கிள்" நவீனா கூப்பிட்டாள்.
