ஒன்று இரண்டு இறந்து விடு
ரமணிசந்திரன்
Casa editrice: Pocket Books
Sinossi
காரைப் பார்த்ததும், வாயிலிருந்த பீடிக்கு வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்த கூர்க்கா, காம்பௌண்ட் கேட்டை வேகவேகமாய் திறந்துவிட்டான்.கார் உள்ளே நுழைந்து போர்டிகோவில் அதங்கி நின்றது. ஹரிஹரேஷ் காரை விட்டு இறங்காமல் கீதாம்பரியை ஏறிட்டான்.“கீத்து...”“ம்...”“நீ படுத்து தூங்கு... நான் ஸ்டார்லைட் ஹோட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...”கீதாம்பரி சிணுங்கிக் கொண்டே - அவனுடைய தோளில் குத்தினாள்.“நீங்க அந்த ஸ்டோரி டிஸ்கஷனுக்கு போய்த்தான் ஆகணுமா...?”“என்ன கீத்து... இப்படி கேட்டுட்டே... நாளைக்கு மத்தியானம் நாம் சிங்கப்பூர் புறப்படறோம்... திரும்பி வர ஒரு மாசமாயிடும்... இன்னிக்கு கே.ஜே.ஆர். மூவீஸ் கதையை பைனலைஸ் பண்ணிட்டுப் போனாத்தான்... நான் திரும்பி வர்றதுக்குள்ளே ஸ்கிரிப்ட் ரெடியாயிருக்கும்...”“சரி... டிஸ்கஷன் முடிஞ்சு எத்தனை மணிக்கு வருவீங்க?”“எப்படியும் மூணு மணி ஆயிடும்... எவ்வளவு நேரமானாலும் நான் வந்துடறேன். நீ எனக்காக தூங்காமே காத்திட்டிருக்க வேண்டாம் கீத்து.”கீதாம்பரி காரைவிட்டுக் கீழே இறங்கினாள். காரைச் சுற்றிக் கொண்டு ஹரிஹரேஷிடம் வந்தாள்ஜெயக்குமாரைப் பத்தி போலீஸ் கம்பளையண்ட் தர வேண்டாமா...?“நான் ஸ்டார்லைட் ஹோட்டலுக்குப் போற வழியில்தானே போலீஸ் ஸ்டேஷன்...? இன்ஸ்பெக்டர் அபு தாஹிர் ட்யூட்டியில் தான் இருப்பார். ஸ்ட்ராங்கா ஒரு கம்பளைய்ண்ட் எழுதி குடுத்துட்டு போயிடறேன்... வரட்டுமா...?”“கொஞ்சம் குனிங்க...”“எதுக்கு...?”“குனிங்க... சொல்றேன்.”ஹரிஹரேஷ் குனித்தான்.அடுத்த விநாடி -அவனுடைய கன்னத்தில் 'பச்' சென்று முத்தமிட்டாள் கீதாம்பரி. ஹரிஹரேஷ் புன்னகைத்து - “எதிர்பாராத இனிய அதிர்ச்சிக்கு என்னுடைய நன்றி...”காரைக் கிளப்பினான்.“சீக்கிரமா வந்துடுங்க.”“ம்...”கார் காம்பௌண்ட் கேட்டைக் கடந்து - ரோட்டில் பாய்ந்தது. போக்குவரத்து வெறிச்சோடிப் போயிருந்த சென்னை நகர ரோடுகளில் கார் பயணித்து - ஒரு பத்து நிமிஷத்தை விழுங்கியபின் - அந்த போலீஸ் ஸ்டேஷனின் வாசலுக்கு முன்னால் நின்றது.ராத்திரி கேஸ் நான்கைந்தைப் பிடித்து மிரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அபுதாஹிர் - ஹரிஹரேஷைப் பார்த்ததும் - இருக்கையை விட்டு எழுந்தார். (ஹரிஹரேஷின் ஹைஸ்கூல் நண்பன்)“வாங்க டைரக்டர் ஸார்... என்ன இந்நேரத்துல... ஏதாவது ஸ்டுடியோ பிராப்ளமா...?”“நோ... நோ... என்னோட பிராப்ளம் தான். ஒரு கம்பளையண்ட் கொடுக்கணும்...”கம்ப்ளைய்ண்ட் ... யார் மேலே...?”“தொப்பியைக் கழட்டி வெச்சுகிட்டு... என்னோட கார்க்கு வாங்க இன்ஸ்பெக்டர்... கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசணும்...”அபுதாஹிர் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளை ஏறிட்டார்.“யோவ் ட்ரிபிள் ஃபோர்... புடிச்சுட்டு வந்த நாலு கழுதைகள் மேலேயும் எப்... ஐ... ஆர். புக் பண்ணி உள்ளே தள்ளய்யா... நான் வந்ததும் முட்டிக்கு முட்டி தட்டலாம்...”ஹரிஹரேஷும், அபுதாஹிரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் அபு தொப்பியில்லாத தன் தலையை இரண்டு கைகளாலும் கோதிக்கொண்டே கேட்டார்.“என்னடா, வீட்ல ஏதாவது பிராப்ளமா...?”“ஆமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - கீதாம்பரியோட மொதல் புருஷன் நடு ரோட்ல எங்களை மறிச்சு... என்னையும் அவளையும் கேவலமா பேசினான்.”“என்ன பேசினான்...? மிரட்டினானா?”“மிரட்டலை...”“பின்னே...?”
