Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
முள் முனையில் முகிலா - cover

முள் முனையில் முகிலா

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

சென்னை.அடையார் போட் கிளப் ரோட்டில் - சினிமா டைரக்டர் ஹரிஹரபுத்ரன் பங்களா. உதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க - பீர் வளர்த்துவிட்ட தொப்பையை - இடதுகை விரல்களால் செல்லமாய் வருடிக் கொண்டே - சுற்றிலும் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.“வரிசையா மூணு சில்வர் ஜூபிளி படங்களைக் குடுத்திருக்கீங்க... இந்த வெற்றிக்கு எது காரணம்ன்னு நினைக்கறீங்க...?”“நான் எடுத்துக்கிட்ட கதையம்சம்தான்...”“இசைக்காகத்தான் படம் ஒடிச்சுன்னு சொல்றாங்களே...?”“சம்பந்தப்பட்டவங்க அப்படி சொல்ல வெச்சுருக்காங்க... என் படங்களோட வெற்றிக்கு காரணம் நல்ல கதைதான்... இந்தக் கருத்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையே பட்டவர்த்தனமா எழுதியிருக்கு...”“உங்க அடுத்த படம் என்ன...?”“ஊமை புல்லாங்குழல்கள்...”“லவ் ஸ்டோரியா...?”“படத்தைப் பத்தி இப்ப எதுவும் சொல்றதுக்கில்லை...”“ஹீரோ யாரு...?”“என் படத்துக்கு ஹீரோ கதைதான்...”“கமர்ஷியல் படமா… ஆர்ட் படமா...?”“ஓடினா... கமர்ஷியல் படம்... ஓடாட்டி... ஆர்ட் படம்னு சொல்லிக்கலாம்...”“ஒரு பழம் பெரும் டைரக்டர் உங்களைப் பத்தி கருத்து தெரிவிக்கும்போது - ‘தலைக்கனம் பிடிச்சவர் ஹரிஹரபுத்ரன்’னு சொல்லியிருக்காரே...?”“அவர் சொன்னது சரிதான்... ஏன்னா என்னோட - தலையில் நிறைய விஷயம் இருக்கிறதுனால - கனக்கத்தான் செய்யும்...”“ஒரு பர்சனல் கேள்வி. கேக்கலாமா...?”“கேக்க வேண்டாம்...”“உங்க எதிர்கால லட்சியம் என்ன...?”“எனக்கு மட்டுமில்லை... இந்த சினி ஃபீல்டில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும்... பணம் சம்பாதிக்கிறதுதான் லட்சியம்... சினிமாக்காரங்ககிட்டே இதுமாதிரியான கேள்வியைக் கேட்காதீங்க... ரப்பிஷ்...!” கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் இட்டு தீய்த்துக் கொண்டிருக்கும்போதே -டீ பாயின் மேல் இருந்த அந்த டெலிபோன் கிணுகிணுத்தது.ஹரிஹரபுத்ரன் ரிஸீவரை எடுத்தார்.“ஹலோ...” மறுமுனையில் பெண் குரல்.“அப்பா... நான் முகிலா பேசறேன்...”ஹரிஹரபுத்ரன் உடம்பு பூராவும் மலர்ந்தார்.“அடடே... நீயாம்மா? வழக்கமா ராத்திரி நேரம்தான் போன் பண்ணுவே... இப்ப என்னம்மா... திடீர்ன்னு...?”“ஐயோ... அப்பா... நான்... இப்ப நியூயார்க்கிலிருந்து ஓவர்சீஸ் கால் மூலமா பேசலை...?”“பின்னே...?”“மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து...”ஆனந்தத்தில் அதிர்ந்தார் ஹரிஹரபுத்ரன்
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 73 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Oru Thuli Kadal - cover

    Oru Thuli Kadal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு.
    ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
    
    இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
    Mostra libro
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Mostra libro
  • Velvet Kutrangal - cover

    Velvet Kutrangal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    What happened to the flight that started from Malaysia to Beijing? There is a possibility noone even thought about? Listen to this racy thriller to know more.
    
    மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.
    Mostra libro
  • Brahmaratchas - cover

    Brahmaratchas

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works.
    It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs.
    The novel has been translated into many languages ​​such as Malayalam, Hindi and Tamil etc.
    'Brahmarakchas' was made into a movie in Malayalam.
    "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது."
    Mostra libro
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஓரு பிரபலமான இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில் பல பேர் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Mostra libro
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Mostra libro