Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கற்பனையோ அற்புதமோ! - cover

கற்பனையோ அற்புதமோ!

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

அம்மா!” என்று, தன் ‘சன்னி’யைக் கிளப்பியவாறே உரக்க அழைத்தாள் சித்ரகலா. “நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறேன்...” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, அவளுடைய அன்னை மாலினி வந்து சேர்ந்தாள்.கையிலிருந்த உணவு பாக்கெட், தண்ணீர் அடங்கிய பையை ‘சன்னி’யில் தொங்கவிட்டவள், “சரிதான்மா, போய் நல்ல பிள்ளையாய்ப் படித்துவிட்டு வாடாம்மா, கண்ணு!” என்று உருக்கமாய்க் கூறவும் தாய் மகள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.“நூற்றுக்கு ஒரு பத்து... அல்லது பதினைந்து மார்க் வாங்குகிற அளவு படித்தால் போதுமா?” என்று மகள் அப்பாவியாய்க் கண்களை விரிக்க, “சேச்சே! அவ்வளவு கஷ்டப்படாதே, கண்மணி! சும்மா ஓர் ஐந்து, ஆறு மதிப்பெண் எடுத்தால் போதாது?” என்று கேட்க மீண்டும் சதங்கை ஓசையாய் நகையொலி கலகலத்தது.“ம்கூம்! அந்தக்காலத்தில் நீங்கள் என்ன மாதிரி படித்தீர்கள் என்று இப்போது தெரிகிறது. இருக்கட்டும், உங்களை வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று செல்ல மிரட்டலுடன் வண்டியைக் கிளப்பிச் சென்றாள் மகள்.வெறும் ‘பான்ட்’ மட்டும் மாட்டி விட்டிருந்த நீளக் கூந்தல் காற்றில் பறக்க, எழில் ஓவிமாய்ச் சென்ற மகளின் அழகை ரசித்தபடி நின்றிருந்த மாலினிக்குத் திடுமென உள்ளூரத் திக்கென்றதுபெற்றவளின் கண்தானே பிள்ளைகளுக்கு ஆதாரம்!சேச்சே! அதெல்லாம் சும்மா! பெற்று வளர்த்த தாயார் அன்பாய் ஆசையாய்ப் பார்ப்பதனாலேயே பிள்ளைகளுக்குக் கெடுதல் நேருமா, என்ன? வெறும் கதை!... ஆனாலும், ‘என் மகளை எந்தத் தீமையும் அணுகாமல் கூடவே துணையிருந்து காப்பாற்று, முருகா!’ என்றும் வேண்டிக் கொண்டது அந்த அன்னை மனம்
 
தாயின் மனதில் இப்படி ஒரு சில சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை நல்லபடியாகவே சென்றடைந்தாள் சித்ரகலா.‘காது கேளாதோர், வாய் பேசாதோர்’ பள்ளி அது அவளது பள்ளி இறுதி ஆண்டிலும், கல்லூரி நாட்களிலும் ‘வாலன்டரி வொர்க்’காக அவ்வப்போது இங்கு வந்து. அவள் பணியாற்றினாள். ஏனோ, மனதிற்கு மிகவும் பாந்தமாக இருக்கவே, படிப்பு முடிந்தபின், இங்கு ஒரு முழுநேர ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கினாள்.அவளுடைய தாயார் மாலினிக்கு முதலில் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘பொழுது போகவில்லை என்றால் மேலே படி, படிப்பு விருப்பம் இல்லை என்றால் தையல், பெயிண்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எதிலாவது சேர். எல்லாம் விட்டு, இது எதற்கு? முதலில் பணி, தொண்டு என்று பெருமையாக இருந்தாலும், எப்போதும் அந்தப் பிள்ளைகளின் இழப்பை எண்ணி ஒரு வேதனையுடனேயே வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏனம்மா இந்தத் தலையெழுத்து?” என்று மகளைத் தடுக்க முயன்றாள்.“எல்லோரும் இப்படியே நினைத்து விலகிப் போனால் யார் அம்மா அவர்களுக்கு உதவுவார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் மகள்.“சம்பளத்திற்காக வருகிறவர்கள் இருப்பார் என்று சொல்லாதீர்கள், மன ஈடுபாடு இல்லாமல் வெறும் கூலிக்காக உழைக்கிற உழைப்பு இங்கே போதாது!” என்று கூறிப் பிடிவாதமாக இந்த வேலையில் சித்ரகலா ஈடுபட்டாள்.ஆனால், அவளை அறிந்த அவளுடைய அன்னை சொன்னது உன்மையில், உள்ளூர ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும்போது அவளுக்கு மகிழ்ச்சியும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டுவந்து காட்டியபோது, மாலினியே மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவ்வளவு நேர்த்தி அவற்றில்! இல்லாத புலன்களின் சக்தியெல்லாம் இருக்கிற மற்ற புலன்களில் வந்து அதிகப்படியாகச் சேர்ந்துவிட்டது போல அவ்வளவு திறமையோடு செய்யப்பட்டிருந்தன
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 252 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Pandian Parisu - cover

    Pandian Parisu

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    பாண்டியன் பரிசு 
    “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காப்பியமாகின்றது. “பாண்டியன் பரிசு” என்ற சிறுகாவியம் “பாண்டியன் பரிசு’ என்ற ஆட்சி உரிமையைக் கொண்ட பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. 
    பாரதிதாசன் தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
    Mostra libro
  • Short Stories - cover

    Short Stories

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    இவ்வொலி நூலில் மகாகவி பாரதியாரின் கதைகள் 
    ஞான ரதம்; ஆறிலொரு பங்கு; ஸ்வர்ண குமாரி; துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம்; தாஸியும் செட்டியும்; வேதபுரத்தின் இரகஸ்யம்; கொட்டையசாமி; சந்திரத் தீவு; வேப்ப மரம்; காந்தாமணி; கோபந்நா; சூச்சூ; ரெயில்வே ஸ்தானம்; ஸத்யாநந்தர்; குழந்தைக் கதை; புதுப்பேய்; பூச்சித்தேவன்; ஒரு காக்கை கவி பாடிய கதை; அபயம்; கதவு; இருள்; அர்ஜுன சந்தேகம்; உஜ்ஜயநீ; கிளிக் கதை; புதிய கோணங்கி; காக்காய்ப் பார்லிமெண்ட்; பிங்கள வருஷம்; வண்ணான் தொழில்; கடல்; காற்று; கடற்கரையாண்டி; கலியுக கடோற்கசன்; வேணு முதலி; விடுதலை முத்தம்மா கதை; மிளகாய்ப் பழச் சாமியார்; செய்கை; சும்மா; பேய்க் கூட்டம்; சிறுகதை; குண்டூசி வியாபாரம்; வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை; பாம்புக் கதை; குதிரைக் கொம்பு; விநோதச் செய்திகள்; இல்லறம் பெரிதா? துறவறம் பெரிதா?; தேவ விகடம்; கத்திச் சண்டை; சில வேடிக்கைக் கதைகள்; குடியானவனும் திருடனும்; அந்தரடிச்சான் ஸாஹப் கதை;     மலைப்பாம்பும் குரங்குகளும்;     ஓநாயும் வீட்டு நாயும்; குளத்து மீன்கள்;           இருளும் ஒளியும்; பஞ்சகோணக் கோட்டையின் கதை; Andal; The Fox with the Golden Tail
    Mostra libro
  • Peyazhvar Hymns - cover

    Peyazhvar Hymns

    Peyazhvar

    • 0
    • 0
    • 0
    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன. 
    பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளில் யாப்பிலக்கிணத்துக்கு ஏற்ப பேயாழ்வாரின் பாடல்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். 
    பேயாழ்வாரின் 100 பாசுரங்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் தனித்தனி ஒலி நூல்களாக ரமணி ஒலி நூலகத்தில் கிடைக்கின்றன. 
     The Vaishnavite hymns, Nalayira Divya Prabantham are set to music as well as recited in the recitation (parayana) tradition. While a randomly selected couple of hundreds of poems only are set to music and sung by performing artists, the recitation has been established as a discipline. These hymns have been composed according to Tamil Prosody known as //yappu//. They belong to what is known as //iyatramiz//. Such classical compositions have four kinds, AkavarpA, Venpa, Kalippa and Vanjippa (Pavinankal). Each of these have several derivative forms known as Pavakaikal. These conform to the traditional method of rendering in Akavalosai, Seppalosai, Thullalosai and Thunkalosai. This tradition has been lost for good. In an attempt to revive the traditional methods of rendering, Ramani Audio Books has recorded about 1500 hours of audio beginning from Ettuththokai down to contemporary literature through Epics, Bhakthi literature (Saivam, Vaishnavam, Buddhism, Islam) as well as Middle Age Tamil Literature. 
    In this audiobook you can listen to Peyazhvar's Munram Thiruvanthathi (100 verses) rendered in crisp and prosodically correct rendering. Other works by Azhvars are given in separate books.
    Mostra libro
  • திருப்புகழ் - Volume 14 - cover

    திருப்புகழ் - Volume 14

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினான்காம் தொகுதியாக 313 பொதுப்பாடல்களில் 1041 முதல் 1100 வரையிலான 60 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. 
     
    Mostra libro
  • Nooru Naarkaaligal - cover

    Nooru Naarkaaligal

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன்  அங்கேயே  படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு  வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன்  நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும்  தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை  தொழிலாகக் கொண்டு வாழும்  அவனது  பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண்    ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள்.  இவ்வாறாக  மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை கதை.
    Mostra libro
  • Thirattuppaal - திரட்டுப்பால் - cover

    Thirattuppaal - திரட்டுப்பால்

    R Venkatesh

    • 0
    • 0
    • 0
    நகரவாழ் மத்தியத் தர வர்க்கம் என்பது படைப்புக்கான தலைக்காவிரி. தொடும் இடங்கள் எல்லாம் பாத்திரங்களும் காட்சிகளும் நிறைந்தவை. வலிகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் இந்தக் காவிரியில் இருந்து சிறுக சிறுக முகர்ந்து வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜூ வழிவந்தவரான ஆர்.வெங்கடேஷும் அதே முயற்சியையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். நேரடி சம்பவங்களோடு, மனவோட்டம் சார்ந்த சொற்சித்திரம் தீட்டும் பாணியைப் பின்பற்றும் ஆர்.வெங்கடேஷ், எங்கும் குரல் உயர்த்திப் பேசுவதில்லை. வாழ்க்கையின் சில துண்டுகளை இணைத்து, கோவையாக்குவதன் வாயிலாக, கதாபாத்திரங்களில் உள்ளூர ஊசலாடும் மனச்சிக்கல்களுக்கு, எழுத்து வடிவம் தர முயற்சி செய்துள்ளார். மத்தியத் தர வர்க்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையோ, தீர்ப்புகளையோ முன்வைக்காமல், அதன் போக்கை முடிந்தவரை அப்படியே பதிவு செய்வது, ஆர்.வெங்கடேஷின் பாணி. நீங்கள் அறிந்த உலகத்தையே, உங்களுக்கு மலர்த்திக் காட்டும் இந்தச் சிறுகதைத் தொகுதி. ஆர்.வெங்கடேஷ் - கணையாழி இதழின் மூலம் அறிமுகமானவர். எழுதவந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 2 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இராஜாஜி, ஆதவன் ஆகியோரது இலக்கிய பங்களிப்புகள் பற்றி, சாகித்ய அகாதெமிக்காக சிறுநூல்கள் எழுதியுள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வழங்கிய எழுத்துத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது, கலைமகள் நாராயணசாமி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 
     இது இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.  
    An Aurality audiobook production
    Mostra libro