Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கோவையில் ஒரு குற்றம் - cover

கோவையில் ஒரு குற்றம்

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

பாரஸ்ட் காலேஜிற்கு கொஞ்சம் தள்ளி - ஏராளமான சவுக்கு மரங்களுக்கு மத்தியில் காவி நிற டிஸ் டெம்பரோடு - அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் தெரிந்தது. மெயின் ரோட்டிலிருந்து உள்ளே போன - அந்த பத்தடி அகல மண்பாதை கூட வெகு புராதனமாய் வளைந்து வளைந்து போயிருந்தது. 'புதை பொருள் ஆராய்ச்சி நிலையம்' என்கிற வார்த்தைகளை இந்தியிலும் இங்கிலீஷிலும் மொழிபெயர்த்துச் சொன்ன அந்த போர்டு சமீபத்திய மழையிலும் வெய்யிலிலும் வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்தது. - உள்ளே இருந்த ரீடிங் ஹாலில் -வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டிருக்க - ஏழு நாற்காலிகளில் ஜெசிந்தாவிலிருந்து - ஊர்மிளா வரை நிரம்பியிருந்தார்கள். பக்க வாட்டு நாற்காலிகளில் தேவாமிர்தமும் - அகிலா நாராயணனும் மோவாய்களைத் தாங்கி தெரிந்தார்கள். அவர்களுக்கு முன்புறமாய் இருந்த மேடையின்மேல் புரபசர் லிங்கப்பா தன் குறுந்தாடியை இடது கையால் சொறிந்து கொண்டே - வலது கையிலிருந்த குச்சியை சுவரில் மாட்டியிருந்த ஒரு மேப்பின் மேல் நகர்த்திக் கொண்டிருந்தார். மேப்பின் நெற்றியில் சிறுவாணி - வெள்ளியங்கிரி காடுகள் என்று எழுதியிருந்தது. மேப் பூராவும் சிவப்பு புள்ளிகள்.லிங்கப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.“நீங்கள் புறப்பட்டு போக வேண்டிய இடம் சிறுவாணிக்கும் வெள்ளியங்கிரிக்கும் இடைப்பட்ட பாரஸ்ட்... அந்தப் பகுதியை புல்லு மேடுன்னு சொல்லுவாங்க... அடர்த்தியான பாரஸ்ட்... பாரஸ்ட்டுக்குள்ளே தோல் பதனிடுகிற தொழிற்சாலையொண்ணு பல வருஷமா மூடியிருக்கு. அதுல வேலை நடந்தப்போ லேசா ஜனநடமாட்டம் இருந்து வந்தது... ஆனா இப்போ நடமாட்டமே இல்லை...”ஜெசிந்தா எழுந்து நின்றாள்“ஸார்... ஒரு சந்தேகம்?”“என்ன?”“அந்த இடத்துல போய் தோல் பதனிடற தொழிற்சாலையை யார் ஸார் கட்டினாங்க?”“ரோத்மான் என்கிற ஒரு வெள்ளைக்காரன்... ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தஞ்சுல கட்டின தொழிற்சாலை அது... அவனுக்கப்புறம் எத்தனை பேர்கிட்டே அது கைமாறி இப்போ கோயமுத்தூர் மில் ஓனர் ஒருத்தர் கிட்டே இருக்கு... அஞ்சு வருஷம் தொழிற்சாலையை அவரும் நடத்திப் பார்த்தார். முடியலை. மூடிட்டார்...”இதயா எழுந்தாள்.“நாங்க போக வேண்டிய இடம் எது ஸார்...?”“புல்லுமேடு பாரஸ்ட்... பேர்தான் புல்லு மேடு... ஆனா உள்ளே பூராவும் ராட்சச மரங்கள். சூரிய வெளிச்சம் ஒரு சொட்டு கூட கீழே விழாத பூமி... நீங்க தேடிப் போற காளி கோயில் அங்கேதான் இருக்கு. அந்த காளி கோயிலோட பேர் என்ன தெரியுமா...?”புரபசர் லிங்கப்பா நிறுத்திவிட்டு - எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். அவருடைய இடது கை தாடையில் இருந்த சொற்ப தாடியை சட்சட்சென்று வருடிக் கொண்டிருந்தார். அரை நிமிஷ நேரம் ஹால் முழுவதும் நிசப்தம்... பிறகு அந்த நிசப்தத்தை புரபசர் லிங்கப்பாவே கலைத்தார்.“உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமில்லை... அந்தக் காளியம்மனோட கோயில் பேரு குடல் வாங்கி காளியம்மன் கோயில்... ரொம்பவும் உக்கிரமான காளி... ஒவ்வொரு அமாவாசையன்னிக்கும்தான் பூசாரி அங்கே போவார். உச்சி நேர பூஜையை முடிச்சுகிட்டு உடனே தன்னோட செம்மேட்டு கிராமத்துக்கு போயிடுவார். அந்த கோயிலுக்குன்னு ஒரு ஜனம் கூட போகாது...”சிறிது நேர மௌனத்திற்கு பிறகு - காஞ்சனா மெள்ளமாய் எழுந்து நின்றாள்.“அந்த கோயில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது ஸார்...?“பதினாறாம் நூற்றாண்டு... சேரன் இரும்பொறை காலத்துல அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்... எல்லாமே கருங்கல்... காளி சிலையோட உயரம் ஏழடி. உக்கிரம் அதிகம். ஏந்தியிருக்கிற சூலத்துல குடல் தொங்குகிற கோரம்...”சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு - மறுபடியும் தொடர்ந்தார் லிங்கப்பா...” உங்களுக்கு அந்த காளி சிலையோ... காளி கோயிலோ முக்கியமில்லை... அதைச் சுற்றி இருக்கிற ஐநூறு மீட்டர் தூரம்தான் முக்கியம்... கடந்த அஞ்சு வருஷ காலத்துல மூணு கல்வெட்டுக்களை அங்கிருந்து தோண்டி எடுத்திருக்கோம். நீங்க எப்படியாவது ஒரு கல்வெட்டையாவது கொண்டு வரணும்... உங்க குழு தலைவர் மிஸ்டர் தேவாமிர்தமும் - திருமதி அகிலா நாராயணனும் இந்த ஆர்க்கியாலஜி துறையில் பல வருஷமா ஈடுபட்டு இருக்கிறவர்கள். கல்வெட்டை கொண்டு வர்ற முயற்சியில் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க...”“நாங்க எப்போ புறப்படணும்... ஸார்...?” இதயா மறுபடியும் எழுந்து கேட்க - லிங்கப்பா சொன்னார்.
Disponibile da: 08/02/2024.
Lunghezza di stampa: 96 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Mostra libro
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஓரு பிரபலமான இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில் பல பேர் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Mostra libro
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Mostra libro
  • Vittu Vidu Karuppaa - cover

    Vittu Vidu Karuppaa

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The village of Vettaikara Mangalam has a strange rule. Only if the village deity Karuppusamy approves, will the villagers do anything. A doctor falls in love with Ratna, a young girl from the village. When he proposes, she asks him to seek the approval of Karuppusamy. Who is this Karuppusamy? Doctor Neena comes in search of the answer. What does she find out? Listen to Vittu Vidu Karuppa.
    
    வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா?
    
    ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
    Mostra libro
  • Theepiditha Thendral - cover

    Theepiditha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை.
    
    இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
    
    சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான். நல்ல வரன்கள் வருகின்றன. அந்த வரன்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்கிற குழப்பம் வருகிறது.
    
    குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, சிவகாமி தன் மகள் இதயா வெளியே போனதும், மாடியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். நூலாம்படைகளை விலக்கிக்கொண்டு ஒரு தேக்குமர பழைய பீரோவைத் திறக்கிறாள். பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள, உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் ஃபார்மலிக் அமிலம் நிரம்பிருக்கிறது... அதன் உள்ளே..?
    
    தீப்பிடித்த தென்றலைக் கேளுங்கள். செவிகளும் தீப்பிடிக்கும்."
    Mostra libro
  • Mohini Koyil - cover

    Mohini Koyil

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
    
    பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
    Mostra libro