சிறகடிக்க ஆசை!
ரமணிசந்திரன்
Casa editrice: Pocket Books
Sinossi
லேகா காலேஜ் முடிந்து வீடு திரும்பியபோது - சாயந்தரம் ஆறு மணி.பாத்ரூம் ஷவரில் பதினைந்து நிமிஷங்கள் நனைந்து விட்டு ரோஜாப் பூ நிற நைட்டிக்குள் நுழைந்தாள் லேகா.டொக்...டொக்...டொக்...கதவுத் தட்டல் கேட்டதைத் தொடர்ந்து குரல் கொடுத்தாள்.“யாரு...?”“நான்தாம்மா...”அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டது.“உள்ளே வா...”ஆவி பறக்கும் டிகிரி காபியோடு உள்ளே வந்தாள் அவள்.“இந்தாங்கம்மா காபி...”“அப்படி டேபிள் மேல வெச்சிட்டுப் போ...”வழியும் காபிக் கோப்பையை சிந்தாமல் கவனமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு தயக்கமாய் நின்றிருந்தாள் தங்கம்மேஜைக்கருகே இருந்த பர்சனல் கம்ப்யூட்டரில் உறையை நீக்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள் லேகா.“என்ன வேணும் தங்கம்...”“அ... அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போன் பண்ணியிருந்தார் லேகாம்மா...”“எதுக்கு...?”“உங்களைத்தான் விசாரிச்சார்...”“என்ன விசாரிச்சார்...?”“நீங்க காலேஜிலிருந்து வந்தாச்சான்னு கேட்டார்... இல்லைன்னு சொன்னதும்... பதறிப் போய்ட்டார்...”“எத்தனை மணிக்கு போன் பண்ணினார்…?”“அஞ்சு மணிக்கு...”“காலேஜ் நாலரை மணிக்கு முடியுது... டாண்ணு அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர முடியுமா...? லைப்ரரிக்குப் போக வேண்டியிருக்கும்... அல்லது ப்ரொபசர்கள்கிட்டே சந்தேகம் கேக்க வேண்டியிருக்கும்...”“உங்க கவலை உங்களுக்கு... அவர் கவலை அவருக்கு… அவர் இருக்கறப்ப லேட் ஆனா பரவாயில்லை... அவர் வெளியூர் போயிருக்கிறப்ப நீங்க வீடு வந்து சேர லேட் ஆச்சுன்னா... அய்யா என்னை சத்தம் போடுவார்ம்மா...”“அவரோட கவலையில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை தங்கம்... நான் ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லை...”“அவருக்கு நீங்க என்னிக்குமே குழந்தைதாம்மா... பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை ஒருத்தன்கிட்டே கட்டிக்குடுக்கற வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும்...”“இட்ஸ் ஹைலி இடியாட்டிக்.”“என்னவோ இங்கிலீஷில் திட்டறீங்கன்னு தெரியுது. நாளைக்கு நீங்க ஒரு பொண்ணுக்கு அம்மா ஆனிங்கன்னா அப்போதுதான் உங்க அப்பாவோட கவலை என்னன்னு உங்களுக்கு நிஜமாவே புரியும். அதுவரைக்கும் அவர் மேல் உங்களுக்குக் கோபம்தான் வரும்...”“கவலையானாலும் சரி... சந்தோஷமானாலும் சரி... அது நியாயமாவே இருந்தாலும் அளவோட இருக்கணும்... அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது... இவர் அளவுக்கு மீறி கவலைப்படறார்... அவர் கவலைப்படறாரா... இல்லை நான் தப்பான பாதையில் போயிடுவேன்னு சந்தேகப்படறாரான்னு எனக்குப் புரியலை...”“இல்லைம்மா...”என்று வார்த்தைகளை ஆரம்பித்த தங்கத்தைப் பாதியில் மறித்தாள் லேகா.“உன்னோட லெக்ச்சர் போதும்... மறுபடியும் அவர் போன் பண்ணினார்ன்னா. நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லிடு...”“சரிம்மா...”தலையசைத்து விட்டுத் தங்கம் நகர்ந்த விநாடி -டிரிங்...டிரிங்...டிரிங்...டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.“அய்யாவாகத்தான் இருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு தங்கம் அறையைக் கடந்தாள்.ரிசீவரை எடுத்துக் காதில் பொருத்தி “ஹலோ...” என்றாள் லேகா.தங்கம் சொன்ன மாதிரியே ராமகிருஷ்ணன்தான் பேசினார்.“லேகா... வந்துட்டியாம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கூப்பிட்டேன்... நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு வேலைக்காரி சொன்னா...”“காலேஜில் ஒரு ப்ரொபசர்கிட்டே சந்தேகம் கேக்கப் போயிருந்தேன்...”“அப்படி ஏதாவது இருந்தா... வீட்டுக்கு ஒரு போன் அடிச்சு சொல்லிடு லேகா... நான் வெளியூரிலிருந்தாலும் மனசெல்லாம் உன் மேலேயே இருக்கும்.”“அப்பா... இட் ஈஸ் டூ மச்...”“என்னோட கவலை உனக்குப் புரியாது...”“நான் எங்கே போனாலும் பைக்கிலும் காரிலும் நீங்க அனுப்பற செக்யூரிட்டி ஆட்கள் நிழல் மாதிரி வர்றாங்களே… அவங்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டிங்கனா நான் எங்கே இருக்கேன்... என்ன பண்றேன்னு அவங்க மூலமாகவே தெரிஞ்சிக்கலாமே...?”“லே… லேகா...”“என்னப்பா அதிர்ச்சி ஆயிட்டிங்க..?”
