Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
மார்ச் ஆறு - இரத்த ஆறு - cover

மார்ச் ஆறு - இரத்த ஆறு

ராஜேஷ்குமார் ராஜேஷ்குமார்

Casa editrice: Geeye Publications

  • 0
  • 0
  • 0

Sinossi

ஜெர்மன் மிலிடெரி டெக்னாலஜி - மேட் இன் தைவான்’ என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் விஷ்ணுவின் மூளையில் ஒரு அலாரம் அடித்தது. ஏ.சி. சூர்யமூர்த்தியை ஏறிட்டான்.“ஸார்...! இது ஏதோ ராணுவம் சம்பந்தப்பட்ட விவகாரமாய் இருக்கும் போலிருக்கு. மொதல்ல கொலையுண்ட இந்த பிரம்மபுத்ரனோட பயோடேட்டா என்னான்னு பார்க்கணும். அவரோட செல்போன் எங்கே...?”“விஷ்ணு! நான் இந்த ரூமுக்குள்ளே எண்ட்டர் ஆனதுமே மொதல்ல செல்போனைத்தான் தேடினேன். கிடைக்கலை. ஹோட்டல் ரிக்கார்ட்ஸில் அவரோட சொந்த ஊர் மும்பைன்னு சொல்லி ஒரு அட்ரஸ் கொடுத்துஇருந்தார். அந்த அட்ரஸில் ஒரு லேண்ட்லைன் போன் நெம்பரும் இருந்தது. அந்த டெலிபோன் எண்ணுக்கு டயல் பண்ணிப் பார்த்த போது ரிங் போயிட்டேயிருந்தது. யாரும் அட்டெண்ட் பண்ணலை. மும்பை போலீஸீக்குத் தகவல் கொடுத்து அந்த அட்ரஸில் போய்ப் பார்க்கும்படி இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்து இருக்கேன். பட் அங்கேயிருந்து இன்னும் பதில் வரலை...”ஃபாரன்ஸிக் அதிகாரி பசுபதி குறுக்கிட்டார். “ஸார்! இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரோட டெக்னாலஜி என்னான்னு எனக்குத் தெரியும். சொல்லட்டுமா... ஸார்?”“ப்ளீஸ்”“ஸார்...! தீப்பெட்டி அளவில் கைக்கு அடக்கமாய் இருக்கிற இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரை சுருக்கமாய் V.T. ன்னு சொல்லுவாங்க. இந்த V.T. யில் ஏதேனும் ஒரு சிம்கார்டைப் பொருத்தி யார்க்கும் தெரியாமே ஒரு இடத்துல மறைச்சு வெச்சுட்டா உலகத்தோட எந்த மூலையில் இருந்தும் யார் ஃபோன் பண்ணினாலும் அதாவது அந்த எண்ணுக்கு மொபைல் ஃபோன் மூலமாய் டயல் செய்தா இந்த V.T. இருக்கும் இடத்தில் ரிங்டோன் வராது. மாறாய் ஃபோன் செஞ்சவங்களுக்கே ஒரு ரிங் சவுண்டு மட்டும் கேட்கும். அதுக்கப்புறம் V.T. இருக்கிற இடத்திலிருந்து குறிப்பிட்ட தூர சுற்றளவில் என்ன பேசிக்கிறாங்கன்னு தெளிவாய் கேட்க முடியும். 5 மணி நேரம் பாட்டரி சார்ஜ் நீடிக்கும். பேசினாத்தான் சார்ஜ் டவுணாகும்.ஏ.சி.யும் விஷ்ணுவும் அந்த ஃபரான்ஸிக் ஆபீஸரை வியப்பாய்ப் பார்த்தார்கள்.“அப்படீன்னா கொலை செய்யப்பட்ட பிரம்மபுத்ரன் இந்த அறைக்குள்ளே இருக்கும்போது அவர் என்ன பேசறார்ன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக யாரோ இங்கே இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரைப் பொருத்தியிருக்காங்க..?”“எஸ்... ஸார்...! அப்படித்தான் யூகம் பண்ண வேண்டியிருக்கு...!” ஃபாரன்ஸிக் ஆபீஸர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹோட்டல் மானேஜர் பிலிப்ஸ் தயக்கமாய் உள்ளே வந்தார். ஃபுல் சூட் தரித்து உயரமாய் இருந்த பிலிப்ஸ் அந்த நிமிடம் வியர்த்துப் போயிருந்தார். ஏ.சி. அவரை ஏறிட்டார்.“என்ன மிஸ்டர் பிலிப்ஸ்...! மும்பை போலீஸ்கிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்ததா?”
 
வந்தது ஸார்.”“என்ன தகவல்?”“விஞ்ஞானி பிரம்மபுத்ரன் இந்த ஹோட்டல்ல ரூம் எடுக்கும் போது ஹோட்டல் ரிக்கார்ட்ஸுக்கு அவரோட நேட்டீவ் ப்ளேஸான மும்பை அட்ரஸைக் கொடுத்திருந்தார். மும்பை போலீஸ் இப்போ அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தபோது வீடு பூட்டியிருந்திருக்கு ஸார். பூட்டின வீட்டை போலீஸ் திறந்து பார்த்தப்ப வீடு தூசியும் நூலாம் படையுமாய் குப்பை மேடு மாதிரி இருந்திருக்கு. வீடு ரொம்ப நாளாய் - அதாவது கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் பூட்டி வெச்சிருந்தாத்தான் அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கும்ன்னு சொன்னாங்க ஸார்...
Disponibile da: 11/01/2024.
Lunghezza di stampa: 89 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Venduthal Eppadi Irukkavendum - cover

    Venduthal Eppadi Irukkavendum

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • எட்டுத் திக்கும் மதயானை - Ettu Thikkum Madha Yaanai - cover

    எட்டுத் திக்கும் மதயானை - Ettu...

    Nanjil Nadan

    • 0
    • 0
    • 0
    எட்டுத் திக்கும் மதயானை 
    படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி . 
    பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் .. 
    என்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்! 
    நாஞ்சில் நாடன் 
    Mostra libro
  • Naanendral Adhu Naanalla - நானென்றால் அது நானல்ல - Short Stories - cover

    Naanendral Adhu Naanalla -...

    Dhivakar

    • 0
    • 0
    • 0
    நானென்றால் அது நானல்ல  
    திவாகர்  
    பொருளடக்கம் : 
    1. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை  
    2. வண்டு  
    3. இப்படியும் ஒரு பிரகிருதி  
    4. ஏழாவது ஆள்  
    5. நந்தியாவட்டைப்பூ  
    6. காலம் மாறிபோச்சு  
    7. க்யூட்  
    8. மச்ச கன்யா  
    9. நான் என்றால் அவனும் நானும்  
    10. நான், அவள் , வானத்துநிலவு  
    11.காதறுந்த ஜோசியன் 
    Mostra libro
  • Aadukiraan Kannan - cover

    Aadukiraan Kannan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • Yudhishtram - Short Story Collection - cover

    Yudhishtram - Short Story...

    Vidya Subramaniam

    • 0
    • 0
    • 0
    வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம்.  
    எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Mostra libro
  • Naavidharaai Vadivedutha Narayanan - cover

    Naavidharaai Vadivedutha Narayanan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro