நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள்
Owen Jones
Traduttore Charlie
Casa editrice: Tektime
Sinossi
“உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்” என்ற இந்த நூல், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவும் கருவிகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் அடிப்படைகள், கலாச்சார வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நூல் நடைமுறை பயிற்சி அறிவுறுத்தல்களை வழங்குகிறது. நீங்கள் சிறந்த வகையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்து வலுவான மற்றும் நிறைவான உறவுகளை வளர்க்க நிகழ் உலக உதாரணங்களையும் வழங்குகிறது. இந்த நூல் முழுவதிலும், தகவல் பரிமாற்றத் திறன்களை எப்படிவளர்த்துக்கொள்வது, உணர்ச்சிகளை எப்படி அறிந்து அவற்றைச் சமாளிப்பது, பரிவு மற்றும் கவனமாகக் கேட்கும் திறனை வளர்ப்பது மற்றும் உறுதியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது, நம்பிக்கையைவளர்ப்பது, உறவுகளின் நெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் திறம்பட்ட தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வளர்ப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வீர்கள். காதல் உறவு, நட்பு, தொழில்ரீதியான உறவு, இவற்றில் எந்த வகையான உறவாக இருந்தாலும், அதற்குத் தேவையான கருத்துகளை இந்த நூல் வழங்கும். வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலக சூழலில், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் “உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்”.
