Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள் - cover

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள்

Owen Jones

Casa editrice: Tektime

  • 0
  • 0
  • 0

Sinossi

“உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்” என்ற இந்த நூல், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவும் கருவிகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் அடிப்படைகள், கலாச்சார வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நூல் நடைமுறை பயிற்சி அறிவுறுத்தல்களை வழங்குகிறது. நீங்கள் சிறந்த வகையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்து வலுவான மற்றும் நிறைவான உறவுகளை வளர்க்க நிகழ் உலக உதாரணங்களையும் வழங்குகிறது. இந்த நூல் முழுவதிலும், தகவல் பரிமாற்றத் திறன்களை எப்படி
வளர்த்துக்கொள்வது, உணர்ச்சிகளை எப்படி அறிந்து அவற்றைச் சமாளிப்பது, பரிவு மற்றும் கவனமாகக் கேட்கும் திறனை வளர்ப்பது மற்றும் உறுதியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது, நம்பிக்கையை
வளர்ப்பது, உறவுகளின் நெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் திறம்பட்ட தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வளர்ப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வீர்கள். காதல் உறவு, நட்பு, தொழில்ரீதியான உறவு, இவற்றில் எந்த வகையான உறவாக இருந்தாலும், அதற்குத் தேவையான கருத்துகளை இந்த நூல் வழங்கும். வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலக சூழலில், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் “உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்”.PUBLISHER: TEKTIME
Disponibile da: 16/12/2023.
Lunghezza di stampa: 102 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Panchatantra Stories - cover

    Panchatantra Stories

    Thilagam, Deepika Arun, Bavya

    • 0
    • 0
    • 0
    பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? 
    சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!
    Mostra libro
  • Avvaiyar Nalvazhi - Tamil Audio Book - நல்வழி - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Nalvazhi - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. 
    Mostra libro
  • Valmiki Ramayanam Part 5 - Sundara Kandam - cover

    Valmiki Ramayanam Part 5 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    சுந்தர காண்டத்தில்,  ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Mostra libro
  • Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam - cover

    Valmiki Ramayanam Part 2 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல்  அயோத்தி மக்கள்  தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது,  பரதன் அயோத்திக்கு  வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Mostra libro
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Mostra libro
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Mostra libro