Hymns from 11th Thirumurai
Nampiandarnampikal
Narratore Ramani
Casa editrice: RamaniAudioBooks
Sinossi
பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் நம்பியாண்டார் நம்பிகள். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர். விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார். நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாக வும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய வற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை யின் வகைநூலாய் பொல்லாப்பிள்ளையார் தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு திருத் தொண்டர் திருவந்தாதி என்ற வகை நூலையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது திருஏகாதசமாலை என்னும் பிரபந்தத்தையும் அருளி இத்திருமுறையில் சேர்த் தருளினார்.
Durata: circa 3 ore (03:13:00) Data di pubblicazione: 16/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

