திருமகள் தேடி வந்தாள்
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Casa editrice: Pocket Books
Sinossi
“அம்மா, வேலையை முடிச்சுட்டேன். கிளம்பட்டுமா”“இரு விசாலம் இதோ வரேன்”உள்ளே சென்ற பார்வதி, கையில் ஸ்விட் பார்சலுடன் வந்தாள்.“இந்தா உன் மகள் கல்பனா கிட்டே... இல்லே இல்லை டாக்டர் கல்பனா கிட்டே கொண்டுபோய் கொடு அவ நினைச்சது போல நல்லபடியா படிப்பை முடிச்சுட்டா.இப்ப வேலையும் கிடைச்சு சென்னைக்கு போகப் போறீங்க. நீ இனிமே டாக்டரோட அம்மா, உன் மகளுடன் நிம்மதியா இரு விசாலம்”“உங்களை மாதிரி கருணை உள்ளம். கொண்டவங்க செய்த உதவியினால் என் மகள் கனவு கண்டது போல டாக்டர் ஆயிட்டா. நினைச்சு பார்க்கும் போது நெஞ்சம் குளிர்ந்து போகுது...பெத்த மகளையும், கட்டினவரையும் விட்டுட்டு ஒடி போனான் என் புருஷன். நாலு வயசு மகளை எப்படியும் கரை சேர்க்கணும்னு வைராக்கியமாக வாழ்ந்தேன்.என் மகள் பெத்த மனதில் பாலை வார்த்துட்டா”மனம் நெகிழ பேசுகிறாள் விசாலம்.அங்கு வந்த பார்வதியின் கணவர் சவேசன்,“விசாலம், நீயும் கல்பனாவும் சென்னையில் தங்க வீடு ரெடியா இருக்கு. நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கே. குறைஞ்ச வாடகையில் நல்ல வீடு கிடைச்சுருக்கு”“என்னய்யா சொல்றீங்க”“கல்பனா, போன மாசம் என்னை பார்த்து சொல்லிச்சு சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. உங்க சிபாரிசுலே, வேலைக்கு ஏற்பாடு பண்ணின மாதிரி, நாங்க தங்கறதுக்கும் வீடு உங்க முயற்சியில் பார்த்து கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்லிச்சு.”என் நண்பரோட மகன் லயன் வீடு கட்டி வாடகைக்கு விட்ருக்கான். தி.நகரில் நல்ல இடம் வரிசையா நாலுவீடு இருக்கு. அதிலே ஒண்ணு காலியாக இருக்குன்னு சொன்னான். உங்களை பத்தி சொல்லி, அந்த வீட்டை உங்களுக்கு வாடகைக்கு தர சொல்லிட்டேன்.”“ரொம்ப சந்தோஷம் ஐயா. ஏழைங்களுக்கு உதவற உங்களை மாதிரி நல்லவங்களுக்கு நாங்க என்ன கைமாறு செய்யமுடியும். நன்றி தான் சொல்ல முடியும்.”“இருபது வருஷமா எங்க குடும்பத்துக்கு எவ்வளவு உழைச்சிருக்கே. ஏதோ எங்களால முடிஞ்ச உபகாரம் அவ்வளவு தான்.”“சரிங்க ஐயா. நான் கிளம்பறேன். கல்பனா உங்களை பார்க்க வருவா பட்டணத்தில் வேலை பாக்க போறா. நீங்க பெரியவங்க, நல்ல புத்திமதி சொல்லி அனுப்புங்க”“கல்பனா ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு அடுத்தவங்க சொல்லி தர ஒண்ணுமில்லை. எல்லாரையும் புரிஞ்சு நல்லபடியா நடந்துப்பா”நீ சந்தோஷமா, நிம்மதியா உன் மகளோடு போய் சென்னையில் இரு விசாலம்”தன் காலில் விழும் மகளை தூக்கி நிறுத்துகிறாள் விசாலம்.“என்னம்மா, எதுக்கு காலில் விழறே.”“என்னை ஆசிர்வாதம் பண்ணும்மா. என்னை பெத்தெடுத்து தனிமனுஷியா வளர்த்து, இதோ சமுதாயத்தில் ஒரு டாக்டராக என்னை தலைநிமிர செய்தவ நீ தான்மா.
