Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
தென்றலாக நீ வருவாயா - cover

தென்றலாக நீ வருவாயா

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

துர்க்கை அம்மனின் முன் விளக்கேற்றி நைவேத்திய பொங்கல் எதிரில் இருக்கிறது.பிராத்தனையில் ஈடுபட்ட நந்தினியின் உதடுகள் ஸ்லோகங்களை முனுமுனுக்கிறது.துர்கே ஸ்ம்ருதா கரபிதீதி அசேஷ ஜந்தோஸ்வஸ்தை ஸ்த்ருதா மதிமதீப ஸுபாம் ததாஸிதாரித்ர்ய துக்க பயஹாரிணி காத்வதன்யாசர்வோபகார கரணாய சதா ஆர்த்ர சித்தா...தீபம் காட்டி... கண்களில் ஒற்றிக் கொள்கிறாள்.பூஜை அறையை விட்டு வெளியே வந்தவள், சோபாவில் புன்முறுவலுடன் பரத் உட்கார்ந்திருப்பதை பார்க்க.“நீ எப்ப வந்தே பரத்.’’“நீ மனசுருகி ஸ்லோகம் சொன்னியே அப்பவே வந்துட்டேன்மா... சாமி கும்பிடற அது தெரியுது... ஆனா அந்த ஸ்லோகத்திற்கான அர்த்தம் மட்டும் தெரியலை.”“நீ துர்க்கையை நினைத்தாலே போதும் அனைத்து உயிர்களின் பயத்தை போக்கி, அபயகரம் நீட்டி, அன்போடு நம்மை காத்து நிற்பாள். இது தாம்பா அதன் அர்த்தம்.”மகன் அருகில் உட்கார்ந்தாள்.“எப்படிம்மா... எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்கே.’’“இல்லை பரத், நான் தெரிஞ்சுக்கிட்டது கொஞ்சம் தான். என் அப்பாவுக்கு தெய்வபக்தி அதிகம். தினமும் ஒரு மணி நேரம் மனம் லயித்து சாமி கும்பிடுவார்.“அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது தான்... அதுசரி இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டே.”“பாங்க் வேலையா கஸ்டமரை பார்க்க போனேன். போன வேலை முடிஞ்சுது. பாங்குக்கு போன் பண்ணி சொல்லிட்டு வந்துட்டேன்.”“காபி போட்டு கொண்டு வரட்டுமா.”“வேண்டாம்மா... இன்னைக்கு நிறைய காபி சாப்பிட்டுட்டேன் நைட் டின்னர் மட்டும் போதும்.”“பரத்... அப்பாவோட திதி அடுத்த வாரம் வருதுப்பா.”“ஞாபகம் இருக்குமா. வழக்கம் போல புரோகிதரை பார்த்து சொல்லிடவா…”“ஆமாம்பா... நாலு வருஷமாச்சு அப்பா நம்மை விட்டு போயி... அந்த நல்ல மனிதரோடு வாழ்ந்த நாட்கள் பசுமை மாறாமல் மனசில் நிறைச்சிருக்கு.”நந்தினியின் குரலில் நெகிழ்வு. பரத்தின் மனதிலும் அப்பாவின் ஞாபகங்கள். ஆமாம்மா அப்பா ஒரு ஜெம் அவரை போல் அனுசரிச்சு போகும் மனிதரை பார்க்க முடியாது.“ஒரு தந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நண்பனாக என் கை பிடிச்சு, என்னோடு வந்தவர்.”‘‘அம்மாகிட்டே நான் பகிர்ந்துக்க முடியாத விஷயத்தை அப்பாகிட்டே பகிர்ந்துக்கணும்னு மனசு துடிக்குது. ஆனா அவர் இல்லையே.”“அப்பா அளவுக்கு அம்மா நெருக்கம் இல்லை. அப்படிதானே பாத்”“உன்கிட்டே சொல்லாமலா... நேரம் வரும்போது சொல்றேன்மா சரி, இன்னைக்கு என்ன டிபன்.”பேச்சை மாற்ற.“உனக்கு பிடிச்ச இடியாப்பம், குருமா”“வெரிகுட்”அம்மாவை பார்த்து சிரிக்கிறான்அழகாக பூத்து குலுங்கும் குரோட்டன்ஸ் செடிகள். கச்சிதமாக வெட்டப்பட்டு காட்சிதரும் மயிலிறகு செடிகள் நடைபாதை, நீருற்று என்று அந்த இடமே ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றிலும் அடர்ந்து நின்ற மரங்களுக்கிடையே இருந்த பெஞ்சில் பரத்துடன் உட்கார்ந்திருந்தாள் அனு.“இன்னைக்கு பீச் போகலாம்னு சொன்னேன். நீ தான் ‘பார்க்’ன்னு டிஸைட் பண்ணிட்டே...சுண்டலை கொறிச்சுட்டு, கடல் அலையை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கலாம்.”“இங்கே இருக்கிற பாதுகாப்பு அங்கே இருக்காது பரத்”“ஏன்... யாராவது பார்த்திடுவாங்கன்னு பயப்படறியா.”“என் ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் பார்த்தா... தேவையில்லாமல் வம்பு.’’“அடடா… இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே.”“பார்த்தால் தான் என்ன என் லவ்வர்... இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமா சொல்லு.”‘‘ஓ... அப்படியா... அப்ப சார் முதலில் என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போயி... அம்மாகிட்டே, இவதான்மா... நான் கட்டிக்க போறவள்னு அறிகமுபடுத்துங்களே பார்ப்போம்.’“கொஞ்ச நாள் ஜாலியா காதலர்களாக சுத்துவோம்னு பார்த்தேன். இப்ப உன்னை அம்மாகிட்டே கூட்டிட்டு போனா அடுத்து கல்யாண பேச்சுதான்.”“நான் ஒண்ணும் உன்னை மாதிரி கோழை இல்லை. உன்னை விரட்டி, விரட்டி காதலிச்சவன்.”சரி புறப்படு போகலாம்
Disponibile da: 12/02/2024.
Lunghezza di stampa: 44 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro