Kapilathevarnayanar Hymns
Kapilathevanayanar
Narratore Ramani
Casa editrice: RamaniAudioBooks
Sinossi
பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் கபிலதேவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். விநாயகர் வழிபாடு விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால் மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர் சிலர். மேலும் இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
Durata: circa un'ora (00:51:31) Data di pubblicazione: 15/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

