Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
உங்கள் உண்மைக் கதை - இயேசுவுடனான உங்கள் புதிய வாழ்க்கைக்கான 50-நாள் அத்தியாவசிய வழிகாட்டி - cover

உங்கள் உண்மைக் கதை - இயேசுவுடனான உங்கள் புதிய வாழ்க்கைக்கான 50-நாள் அத்தியாவசிய வழிகாட்டி

சூசன் ஃப்ரீஸ்

Traduttore Heritage Printers

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

50 நாட்களில் உங்கள் வாழ்க்கை மாறக்கூடும். எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே வேதபாட உபகரணமான இது உலகெங்கும் உள்ள புதிய கிறிஸ்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சீஷத்துவத்தில் இருக்க அத்தியாவசியமானவற்றைக் கொண்டுள்ளது (மேற்கத்திய உதாரணங்கள் இதில் இல்லை). தேவனுடைய கதையையும், அதில் உங்கள் பங்கையும் தெளிவாக அறிந்துகொள்ளாமல் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொள்வதும், உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதும் கடினம்.
 
இந்த 50 தின வாசிப்புப் பகுதிகள் இயேசுவுடனான உங்கள் நட்புறவை ஆழமாக்கவும் அவருடைய சீஷராக இருப்பதற்கான நடைமுறைத் திறமைகளை உங்களுக்குக் கொடுக்கவும் உதவும் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான விசுவாச அத்தியாவசியங்களைக் கொண்டுள்ளன.
 
இந்த எளிய, ஆனால் வாழ்க்கை மாற்றும் பயணத்தின் மூலம் முதிர்ந்த விசுவாசிகள் பல ஆண்டுகளாக அறிந்தவற்றை 50 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள்.
 
வாரம் 1: தேவனுடைய கதை – வேதாகமம் முழுதும் நிறைந்துள்ள கதையைக் கண்டறிதல்
 
வாரம் 2: உங்கள் கதை – கிறிஸ்துவுக்குல் உங்கள் புதிய அடையாளத்தைப் பற்றிக்கொள்ளுதல்
 
வாரம் 3: உங்கள் நோக்கம் – உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுதல்
 
வாரம் 4: நிலைத்திருத்தல் – தேவனுடன் இணைந்திருத்தல்
 
வாரம் 5: தேவனுடைய வார்த்தை – வாழ்க்கையை உருவாக்கியவருக்குச் செவிகொடுத்தல்
 
வாரம் 6: ஜெபம் – வாழ்க்கையை உருவாக்கியவருடன் பேசுதல்
 
வாரம் 7: பரிசுத்த ஆவி – தேவனுடைய பலத்தினால் உங்கள் கதையில் வாழுதல்
 
ஒவ்வொரு வாரமும் வேதாகமம் முழுவதும் பின்னிப் பிணைந்திருக்கும் சம்பவங்களை அதிகமதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள்.
 
எப்படிக் கிறிஸ்துவில் நிலைத்திருப்பது, சந்தேகங்களைத் தீர்ப்பது, சோதனையை எதிர்த்து நிற்பது, மற்றும் பாடுகளின் காலத்திலும் தேவனை ஆராதிப்பது என்பது போன்ற கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியங்களை அறிந்துகொள்வீர்கள்.
 
வேதாகமத்தைப் படிப்பது, உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்வது, சீஷராக்குவது மற்றும் ஜெபிப்பதற்கான நடைமுறை வழிகளையும் கற்றுக்கொள்வீர்கள்.
 
வேதவசனங்கள், கேள்விகள், ஜெபம், மற்றும் அடுத்த படிகளை அறிந்துகொள்வதற்கான இடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிரதான கட்டளை அணுகுமுறையோடு ஒவ்வொரு நாள் பாடமும் நிறைவடைகிறது.
 
நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், இந்தப் புத்தகம் உங்களுக்குரியது:
 
- விசுவாசத்தில் வளர அடுத்தப் படிகளை எடுத்து வைக்க நாடுகிற புதிய விசுவாசி
 
- சீஷராக அல்லது சீஷராக்க நாடும் கிறிஸ்தவர்
 
- கிறிஸ்தவத்தை ஆய்வு செய்து, இயேசுவின் சீஷராக மாறுவது எப்படி என்று அறிய முற்படுபவர்
 
வாசகர்கள் கருத்து 
 
“வாழ்க்கை மாற்றும் ஒரு பயணம்.” ஸ்காட் ரே, ஐஎம்பி
 
“நான் வாசித்த சிறந்த சீஷத்துவப் புத்தகங்களில் ஒன்று.” க்றிஸ் ப்ரைஸ், செட்ஸ் நொகாட்டி போதகர்
 
“இது உங்களை உற்சாகப்படுத்தும் என்றறிவேன்.” Dr. ரிச்சர்ட் ப்ளாக்கபி, எக்ஸ்பீரியன்சிங் காட் புத்தகத்தின் இணை ஆசிரியர்
 
“புதிய கிறிஸ்தவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றாலும், அதிக முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களுக்கும் சவாலாக இருக்கிறது.” மேக் ஹெவனர், ட்ரினிட்டி பேப்டிஸ்ட் காலேஜ்
 
“விவரமான, விளங்கிக்கொள்ள எளிதான, இறையியல் கருத்துக்கள் செறிந்த சீஷத்துவ உபகரணம்.” கெல்லி ஹேச்டிங்ஸ், பெண்கள் ஊழியர் 
 
“சுவிசேஷ சீஷத்துவம் மற்றும் சீஷராக்குவதற்கான பணித்தளக் கையேட்டை ஒன்றாகக் கொண்டுள்ளது.” பாப் பம்கார்னர், தலைமை நற்செய்திப்பணி திட்டச்செயலாளர்
 
“உங்கள் ஆவிக்குரிய பயணத்தின் பல கேள்விகளுக்கு விடை காணும் ஆழமான ஆய்வு இது.” பெட்சாய்தா வார்கஸ், சமாரிட்டானா டெல் போஸோ நிறுவனர்
 
உங்கள் வாழ்க்கை சொல்லும் புதிய கதை உண்டு:
 
உங்கள் வாழ்க்கை மாற புனிதமான சத்தியங்களைப் பிரயோகித்து, உண்மையான விசுவாசத்தையும், சந்தோஷத்தையும் அனுபவித்து மகிழுங்கள். இயேசுவைச் சந்திப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. அவரைப் பின்பற்றுவதன் மூலம் – உங்கள் உண்மைக் கதை தெரிய வரும்.
Disponibile da: 22/11/2024.
Lunghezza di stampa: 426 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam - cover

    Valmiki Ramayanam Part 2 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல்  அயோத்தி மக்கள்  தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது,  பரதன் அயோத்திக்கு  வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Mostra libro
  • Ramayanam Story In Tamil | Sundara Kandam | ராமாயணம் | சுந்தர காண்டம் - cover

    Ramayanam Story In Tamil |...

    Valmiki

    • 0
    • 0
    • 0
    சுந்தர காண்டம் ராமாயணத்தின் மிகவும் புனிதமான மற்றும் பிரபலமான பகுதி. அனுமன் இலங்கை சென்று சீதையைத் தேடி கண்டுபிடிப்பதும், ராவணனை எச்சரிப்பதும், லங்கையை எரிப்பதும் போன்ற அனுமனின் மாபெரும் வீரத்தைக் கூறுகிறது. பக்தி, தைரியம், நம்பிக்கை நிறைந்த காண்டம்.
    Mostra libro
  • Kannanukkum Arjunanukkum Por - cover

    Kannanukkum Arjunanukkum Por

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • Ramayanam Story In Tamil | Kishkinda Kandam | ராமாயணம் | கிஷ்கிந்தா காண்டம் - cover

    Ramayanam Story In Tamil |...

    Valmiki

    • 0
    • 0
    • 0
    கிஷ்கிந்தா காண்டம் அனுமன், சுக்ரீவன் ஆகிய வானரர்களின் உலகில் நடைபெறும் சம்பவங்களை விவரிக்கிறது. சுக்ரீவன் ராமருடன் நட்புறவு ஏற்படுத்துவது, வாலியின் வதை, சீதையைத் தேடும் வானரப் படையின் முயற்சிகள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. அனுமனின் பெருமை வெளிப்படும் காண்டம்
    Mostra libro
  • Ramayanam Story In Tamil | Ayothiya Kandam | ராமாயணம் | அயோத்தியா காண்டம் - cover

    Ramayanam Story In Tamil |...

    Valmiki

    • 0
    • 0
    • 0
    அயோத்தி காண்டம் இராமரின் பட்டாபிஷேகத்திற்கு முன் ஏற்பட்ட சவால்கள், கைகேயியின் வார்த்தை, இராமர் அரண்மனையை விட்டு வனவாசம் செல்லும் தீர்மானம், தசரதனின் துயரம், சீதையும் லட்சுமணரும் இராமருடன் செல்லும் பயணம் ஆகிய உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் இடம்பெறும். இது ராமாயணத்தின் மிகத்தீவிர உணர்வுகள் நிறைந்த பகுதி
    Mostra libro
  • Valmiki Ramayanam Part 7 - Uttara Kandam - cover

    Valmiki Ramayanam Part 7 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. 
     தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Mostra libro