திருப்புகழ் - Volume 11
அல்டிவான் டோரஸ்
Narratore Ramani
Casa editrice: Ramani Audio Books
Sinossi
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினொன்றாம் தொகுதியாக 779 முதல் 861 வரையிலான 82 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் வைத்தீசுரன்கோயில் திருக்கடவூர் திருப்படிக்கரை மாயூரம் பாகை திருவிடைக்கழி தான்தோன்றி கந்தன்குடி திலதைப்பதி திருவம்பர் திருமாகாளம் இஞ்சிகுடி திருநள்ளாறு வழுவூர் கன்னபுரம் திருவாஞ்சியம் திருச்செங்காட்டங்குடி திருவிற்குடி விஜயபுரம் திருவாரூர் பெரியமடம் சோமநாதன்மடம் த்ரியம்பகபுரம் சிக்கல் நாகப்பட்டினம் எட்டிகுடி எண்கண் திருக்குடவாயில் வலிவலம் வேதாரணியம் கோடி .. குழகர் கோயில் திருப்பெருந்துறை திருத்துருத்தி திருவீழிமிழலை திருவாவடுதுறை மருத்துவக்குடி திருப்பந்தணைநல்லூர் திருப்பனந்தாள் திருவிடைமருதூர் தலங்களில் பாடப்பட்டவை.
Durata: circa 3 ore (03:11:26) Data di pubblicazione: 13/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

