Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
மனசே மனசே! - cover

மனசே மனசே!

ஆர்.மகேஸ்வரி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

“டேய்... மகிமாடா...!”“சரி... இப்படி குடு!”“அவளுக்கு நிச்சயமாய்டுச்சில்லே?”“ப்ச்... அதப்பத்தி அப்புறம் பேசலாமே... முதல்ல அவகிட்டே பேசிடறேன்!” ரிஷியிடமிருந்து செல்ஃபோனை பறித்து காதில் ஒட்டவைத்துக் கொண்டான்.“ஹாய் டியர்...!”“.....”“பேசாதே... நான் ரொம்ப கோபமாயிருக்கிறேன்!”“.....”“பின்னே என்ன? ரெண்டு நாளாய்டுச்சி... நீ என்கிட்டே பேசி. நான் ட்ரை பண்ணும்போதெல்லாம் செல் ஆஃப் பண்ணியிருக்கு. என்னை ரொம்ப துடிக்க வைக்கிறே மகிமா!”“.....”“சும்மா... ஃபோன்லே கிஸ் பண்ணிட்டா சமாதானமாய்டுவேனா? நேர்ல வா!”“.....”“ஓக்கே... பிரார்த்தனாவா? நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். ஈவ்னிங் ஸ்பென்சர் வாசல்ல நில்லு... ஓக்கே... ஓக்கேடா செல்லம்!”ரிஷி கண்கள் சுருங்கப் பார்த்தான்“மாப்பிள்ளே... எனக்கு இப்பவே ஒண்ணு தெரிஞ்சாகணும்!”“என்ன?”“டூ யூ லவ் ஹர்?”“யாரைப் பத்தி கேக்கறே?”“மகிமா!”“சேச்சே...! லவ்வாவது மண்ணாவது. அதுக்கெல்லாம் ஏதுடா நேரம்? ரிஸ்க்! லவ் பண்ணா..., அவ கூப்பிடறப்பவெல்லாம் ஓடணும். கொஞ்சம் லேட்டாப் போனாலும் சண்டை வரும். சமாதானப்படுத்த நிறைய பொய் சொல்லி கொஞ்சணும். அவளுக்கு என்னப் பிடிக்கும்னு தெரிஞ்சு கடை கடையா ஏறி இறங்கி வாங்கித்தரணும். எதுக்கிந்த டென்ஷன்?”“அப்ப மகிமாவை லவ் பண்ணலே!”“நிச்சயமா இல்லே! அவளுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணமாகப் போகுது!”“அப்புறம் எப்படி மாப்பிள்ளே... அவ இன்னமும் உன்னோட சுத்திக்கிட்டிருக்கா? - கட்டிக்கப்போறவனுக்கு தெரிஞ்சா பிரச்சனையாச்சே?”“என்னைப் பிடிச்சிருக்கு. என் அப்ரோச் பிடிச்சிருக்கு. விட மனசு வரமாட்டேங்குது அவளுக்கு. இன்னொரு விஷயம் தெரியுமா? கட்டிக்கப் போறவன் கல்ஃப்ல இருக்கான். லவ் மேரேஜ். இன்டர்நெட்ல சாட்டிங் பண்ணி வளைச்சுப்போட்டிருக்கா... மேரேஜுக்குப் பிறகு கல்ஃப்லேயே செட்டிலாய்டப்போறா...”“அப்புறம் எப்படிடா உன்கூட...!”“டேய்... டேய்... இது உனக்கே ரொம்ப அதிகமா தெரியலே? நாம் பழகறதே இப்படிப்பட்ட அல்ட்ரா மாடர்ன் கேர்ள்ஸோடதானே? இப்ப என்ன புதுசா ஆச்சர்யப்படறே?”“உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா மாப்பிள்ளே!”“இருந்துட்டுப் போகட்டும்!“அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே...”“என்ன?”,“வீட்லே எனக்கு மூக்கணாங்கயிறு போட பொண்ணை வலைவீசி தேடறாங்க!”“வெரிகுட் சிட்டியிலேயா? வில்லேஜ்லேயா?”“வில்லேஜ்லேதான் பார்க்க சொல்லியிருக்கேன். அப்பதான் நம்ம வில்லங்கமெல்லாம் தெரியாமலிருக்கும் பாரு!”“எனிவே... பெஸ்ட் ஆஃப் லக்”“சரி... உனக்கெப்போ கல்யாணம்?”“டெய்லி எங்க வீட்டு பெரிசுங்க தொல்லைப் பண்ணிக்கிட்டுதான் இருக்குதுங்க. எனக்கென்னவோ... கல்யாணம், மனைவின்னு புதுசா ஒரு பந்தத்துல மாட்டிக்க மனசு வரமாட்டேங்குது. குழந்தை, குடும்பம்னு ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கிக்கிட்டு, எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக்கிட்டு... வீண் பிரச்சனையத் விலை கொடுத்து வாங்கி... நம்ம சந்தோஷத்தை காத்தாடி மாதிரி பறக்க விட்ருவோமோன்னு கொஞ்சம் பயமாயிருக்கு!”“நமக்கு வீட்டு சாப்பாடு பிடிக்காதுதான். தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் வீட்லே வைக்கிற காரமான மிளகு ரசத்துக்காக மனசு ஏங்கதான் செய்யுது. ரிஸ்க் எதிலே இல்லே மாப்பிள்ளே? லகானை எப்பவும் உன் கையிலேயே வச்சுக்கிட்டா எதுவும் பிரச்சனையில்லே!”“இப்ப எதுக்கு அதெல்லாம்?”போன் அலறியது
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 67 pagine.

Altri libri che potrebbero interessarti

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro