Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
விழியிலே மலர்ந்தது - cover

விழியிலே மலர்ந்தது

ஆர்.சுமதி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“அண்ணே...”தாடை முழுவதும் நுரை வெண்தாடி போல் சிரிக்க ஷேவ் செய்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் வசந்தன் வந்து நிற்பதை உணர்ந்து “ம்...” என்றான்.வசந்தன் இடது கையால் கேசத்தை சரி செய்தவாறே தயக்கமாக கேட்டான்.“அண்ணே... ஒரு இருபது ரூபா பணம் வேணும்.”கண்ணாடியில் இருந்த பார்வையை எடுத்து வசந்தன் மேல் போட்டான் கார்த்திகேயன்.அண்ணனுடைய பார்வையை சந்தித்ததும் வசந்தனின் தலை கல்யாண பெண்ணைப் போல சட்டென்று கவிழ்ந்தது.“எதுக்குப் பணம்?”“இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. போகணும்.”குரல் ரப்பராக இருந்தது.“நீயும்ன் எத்தனை. இன்டர்வியூவிற்கு போவே? எதிலேயாவது செலக்ட் ஆகியிருக்கியா? உனக்கு பஸ்ஸுக்கு நான் கொடுத்த பணத்துல உருப்படியாக ஏதாவது வாங்கியிருந்தா கூட உபயோகமாக இருக்கும். உனக்கு அழிச்சதெல்லாம் வேஸ்ட்.”கார்த்திகேயனின் முகத்தில் கடுமை நிலவியது.“அண்ணே... இந்த தடவை எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும். நம்பிக்கை இருக்கு.”“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்ன நம்பிக்கையோ என்ன இழவோ?” என்றவன் உள் நோக்கி குரல் கொடுத்தான்“ரேவதி... ஏய் ரேவதி.”ரேவதி உள்ளிருந்து வந்தாள். கார்த்திகேயனின் மனைவி.“அயர்ன் பண்ணி கொடுக்கச் சொன்னீங்க. சட்டையை அயர்ன் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரேவதிக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க?” என எரிச்சலுடன் கேட்டாள்.“ஒரு வேலையும் இல்லை. என் பேண்ட் பாக்கெட்ல இருபது ரூபா பணம் எடுத்து இவன்கிட்ட கொடு.”“ஏன்? எதுக்கு பணம்?” கேள்வியே மிகவும் கடுமையாக வந்தது. பார்வை வசந்தனை தாக்கியது.வசந்தனின் தலை மறுபடியும் கவிழ்ந்தது.“இன்டர்வியூவுக்குப் போறானாம்.”லைப் பாதையை“ஆமா! போனாலும் வேலையை தூக்கி கையில கொடுத்துடப் போறாங்க தண்டச் செலவு.”“சரி... சரி. குடு.”அண்ணி ரேவதி முறைப்புடன் சென்று எரிச்சலுடன் எடுத்து வந்து வசந்தனின் கையில் திணித்துவிட்டு நின்றாள்.பணத்தை வாங்கிக் கொண்ட வசந்தன் அறையை விட்டு வெளியே வந்ததும் உள்ளே ரேவதியின் குரல் எரிச்சலுடன் தொடர்ந்தது.“இதப் பாருங்க... இந்த மாதிரி வெட்டி செலவு செய்யறதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”“என்ன பண்ணச் சொல்றே. செய்ய வேண்டிய செலவையெல்லாம் செய்து தானே ஆகணும்.”“நல்லா செய்தீங்க. போடற சோறுதான் தண்டம்ன்னா இதுங்களுக்கு செலவுக்கு வேற கொட்டி அழணும். உங்க அம்மாவுக்கும் உங்க தம்பிக்கும் செய்யற செலவை சேர்த்துவச்சா நம்ம புள்ளைங்களுக்கு உதவும். இதப்பாருங்க. இதுவரைக்கும் செய்த செலவு போதும். உங்க தம்பியை ஒரு வேலையை தேடிக்கிட்டு உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. நமக்கும் புள்ளையும் குட்டியுமா ஆயிடுச்சு. இனியும் நாம அனாவசிய செலவையெல்லாம் செய்துகிட்டு இருக்கக்கூடாது. உங்க தம்பிக்கு வேலை கிடைச்சதும் உங்கம்மாஇங்க இருக்கக்கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்.” ரேவதியின் பேச்சுக்கு கார்த்திகேயன் அடங்கிப் போனான்.கேட்டுக் கொண்டிருந்த வசந்தனுக்கு ரத்தம் கொதித்தது. பெற்ற தாய்க்கு சோறு போடுவதை பாரமாக நினைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை பெருகியது.
Available since: 02/14/2024.
Print length: 106 pages.

Other books that might interest you

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book