பாச மலர்கள்
ஆர்.சுமதி
Casa editrice: Pocket Books
Sinossi
சாரதா குளித்து விட்டுப் புத்துணர்வுடன் வந்தபோது ப்ரவீண் கோவிலிலிருந்து வந்திருந்தான். கையோடு கொண்டு போயிருந்த பையிலிருந்து தேங்காய் மூடி பழம் பூ என எடுத்து மனைவியின் கையில் கொடுத்துக் கொண்டிருந்தான்.சாரதாவைப் பார்த்ததும் அவனுடைய முகம் பூவாக மலர்ந்தது.“அக்கா கிளம்பிட்டியா?”“கிளம்பிக்கிட்டேயிருக்கேன்” என்றாள் சாரதா புன்னகையுடன்.“அக்கா உனக்காகக் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வர்றேன். முதன் முதலா வேலையில சேரப் போறே. அதுவும் சாதாரண உத்யோகம் இல்லை. கலெக்டர் உத்யோகம். நினைச்சாலே உடம்பு சிலிர்க்குது. எவ்வளவு பெரிய பதவி. இப்படி ஒரு வேலை பார்ப்பேன்னு யாராவது நினைச்சுப் பார்த்திருப்போமா? இப்ப மட்டும் நம்ம அம்மாவும் அப்பாவும் இருந்தா எப்படியிருந்திருக்கும்?”அவன் கேட்க அவள் விரக்தியாகச் சிரித்தாள்.“நான் இந்த நிலைமைக்கு நிச்சயம் வந்திருக்க முடியாது. என்னை நாலு சுவத்துக்குள்ள அடைச்சுப் போட்டிருப்பாங்க.”“ப்ச்! அக்கா... இந்த நல்ல நேரத்துல ஏன் பழசைசெயல்லாம் கிளறிக்கிட்டு. சந்தோஷமா கிளம்புக்கா. மஞ்சு அக்காவுக்கு விபூதி குங்குமம் கொடு.”“மஞ்சு... பானுவும், பாக்யாவும் எழுந்துட்டாங்களா?” என்றாள்.“இல்லை இன்னும்நீ சீக்கிரம் எழுந்திருக்கிறது பெரிசில்லை. குழந்தைங்களை சீக்கிரம் எழுப்பிப் படிக்க வை. காலையில் எழுந்து படிக்கிற பழக்கம் அதுங்களுக்கு வரணும். ப்ரவீணுக்கு இன்னைக்கு டியூட்டி உண்டா?”“இல்லை சித்தி. இன்னைக்கு அவருக்கு லீவு தான்.”“சரி பசங்களை எழுப்பி படிக்க வை.”“சரி சித்தி...” மஞ்சு நகர்ந்ததும் சாரதா மறுபடியும் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி ஏதோ ஒரு சிந்தனையிலிருந்து விடுபடுவதைப் போல் தலையை உதறிக் கொண்டாள்.மஞ்சு சாப்பிட அழைத்தபோது பானுவும் பாக்யாவும் சாப்பாட்டு மேசையின் முன் மடிப்பு கலையாத சீருடையில் பளிச்சென்றிருந்தனர்.“ஆன்ட்டி... குட்மார்னிங்”இருவரும் கோரஸாக கூறினர்.“குட்மார்னிங்” என அவர்களுடைய தோளில் செல்லமாகத் தட்டியபடியே இருவருக்கும் இடையே அமர்ந்தாள்.“ஆன்ட்டி... நீங்க இன்னைக்கு கலெக்டர் வேலையில சேரப் போறீங்களா?” பானு ஆர்வமாகக் கேட்டாள்.பானு மூத்தவள். ஐந்தாம் வகுப்பு படிப்பவள்.“ஆமா. எப்படிக் கண்டுபிடிச்சே?”“அம்மா சொன்னாங்க.”“ஆன்ட்டி... நாங்களும் உங்களை மாதிரியே கலெக்டராவோமா?” பானு ஏக்கமானதொரு குரலில் கேட்டாள்.“ஓ... ஷ்யூர். நல்லா படிச்சா ஆன்ட்டி போலவே கெலெக்டராகலாம்.”சாரதா அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வந்து விட்டனர். அவளை வாழ்த்திப் பேசினர்.
