Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மாயத் தோற்றங்கள் - cover

மாயத் தோற்றங்கள்

ஆர்.சுமதி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

கையில் பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்தாள் லலிதா.வெங்கட்ராமன் முகத்தில் குழப்பமும் கவலையுமாக இரு கைகளையும் தலையில் கோர்த்து வைத்தபடி படுத்திருந்தார்.கண்கள் மேலே சுழலும் மின்விசிறியோடு சேர்ந்திருந்தது. வழக்கமாகப் படுக்கையில் உறக்கம் வரும் வரை கோவி. மணிசேகரனையோ, கல்கியையோ, சாண்டில்யனையோ படித்தபடியேதான் தூக்கத்திற்குத் தூது விடுவார். வரலாற்று நாவல்கள்தான் அவருக்குப் பிடிக்கும்.இன்று ‘கடல் புறா’ படிக்கப்படாமல் மூடிக் கிடந்தது.துணுக்குற்றவளாக அவரருகே வந்தாள்.“இந்தாங்கோ... பால் சாப்பிடுங்கோ!” என்றாள்.“அப்படி வை!” குரல் மட்டும் வந்தது. கண்கள் அவளைப் பார்க்கவில்லை.ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பால் கொஞ்சம் கூட சூடு குறையக் கூடாது. உடனே குடித்து விடுவார். இன்றோ ஆறட்டும் என்பதைப் போல் வைக்கச் சொல்கிறார்.“ஏன்னா... என்னாச்சு? என்னவோ போல இருக்கேள்?” என்றபடி அருகே அமர்ந்தாள்.“ப்ச்! தலைவலி...”“தைலம் தேய்ச்சு விடட்டா?”“வேண்டாம். சரியாப் போயிடும்.”“முகமே சரியில்லையே... ஏன்னா... ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”ஆபீஸ்ல ஒரு பிரச்சனையும் இல்லை. வீட்டுலதான் பிரச்சனை.”“வீட்டுல பிரச்சனையா? எனக்குத் தெரியாம வீட்டுல என்ன பிரச்சனை வந்துடப் போகுது?”“உன் பொண்ணை நினைச்சுத்தான் எனக்குக் கவலையா இருக்கு...”இப்பொழுது தன் ஐம்பது வயது அழகை மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல் சிரித்தாள் லலிதா.“அவளுக்கு என்னன்னா குறைச்சல்? நன்னாப் படிச்சிருக்கா! கைநிறையச் சம்பாதிக்கிறா. பார்க்க என்னை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. மகாலட்சுமியாட்டம் ஜொலிக்கறா. ஜாதகத்தைக் கையில் எடுத்தா வர்றவன் கொத்திக்கிட்டு போயிடுவான்...”பொங்கிப் பூரித்து முகமெங்கும் பரவிய சிரிப்பு... மனைவியின் முகத்தில் இன்னும் சில நிமிடங்களில் மறையப் போவதை நினைத்து வருத்தப்பட்டவாறே சொன்னார் வெங்கட்ராமன்.“அவ ஜாதகத்தை வெளியே எடுக்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிட்டாடி.”முகம் மாறினாள் லலிதா.“என்ன சொல்றேள்?”எழுந்து அமர்ந்தார். பேச முயன்றார். முடியவில்லை என்பதைப் போல் செருமினார்.மேசை மீதிருந்த பாலை எடுத்து மெல்லப் பருகினார். அவர் பருகி முடிக்கும் வரை பொறுக்க முடியாதவளைப் போல் லலிதா பயம் கலந்த பார்வையை அவர் மீது பதித்திருந்தாள்.காலி டம்ளரை வைத்தவர் விஷயத்தைச் சொல்ல ஏதோ கொஞ்சம் தெம்பு வந்தவரைப் போல் மனைவியைப் பார்த்தார்.“லலிதா... நந்தினி காதலிக்கிறாளாம்...”இன்னும் சில நிமிடங்களில் பூகம்பம் உண்டாகும் என்று வானொலியில் செய்தி கேட்டதைப் போல் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.“கடவுளே... என்ன சொல்றேள்?உன் பொண்ணு காதல் பண்றான்னு சொன்னேன்.”“என்ன பேசறேள்? என்னமோ கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்றாள்னு சொல்ற மாதிரியில்லே சொல்றேள்?”“இப்பவெல்லாம் காதலும் கம்ப்யூட்டர் கோர்ஸ் மாதிரிதான்டி. மாடர்ன் உலகத்துக்கு கம்ப்யூட்டர் அறிவு இல்லாம எதுவும் பண்ண முடியாது. காதலும் இப்ப அப்படி ஆகிப்போச்சு...”“யார் சொன்னா? பொறாமை புடிச்ச எவனாவது சொன்னான்னு நம்பிட்டேளா? நம்ம பொண்ணு அப்படியெல்லாம் பண்ணமாட்டா!”அவளுடைய நம்பிக்கையைப் பார்த்துச் சிரித்தார். “யாரும் சொல்லலைடி!”“பின்னே... நீங்க கண்ணால பார்த்தேளா? இந்தக் காலத்துல கூடப் படிக்கிற பசங்க கூட... கூட வேலை பார்க்கற பசங்களோட பழகுறது சகஜம்தானே... உங்க பொண்ணை யார் கூடவாவது ஒண்ணாப் பார்த்துட்டு உடனே முடிவு பண்ணிட்டேளா? அவகிட்ட எதையாவது இப்படி ஏடாகூடமா கேட்டு வைக்காதீங்க. நம்மைப் பழம் பஞ்சாங்கம்னு நினைச்சுடப் போறா...”வாய் விட்டே சிரித்து விட்டார்
Available since: 02/14/2024.
Print length: 31 pages.

Other books that might interest you

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamlai Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book